இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணை முடிந்த நிலையில் முபசீரா கணவர் ஆரிஃப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான சனோஃபர் அலி யின் காய்கறி கடை அருகே என் கடை உள்ளது. அதன் அடிப்படையில் என்னிடமும் விசாரணை செய்தனர். அரபிக் கல்லூரிக்கு சென்றீர்களா என விசாரித்தனர்… நான் சென்றது இல்லை என கூறினேன். 1.5 ஆண்டுகளாக தான் சனோஃபர் அலியை தெரியும். பக்கத்து கடை என்ற அடிப்படையில் விசாரித்து விட்டு கிளம்பினர். ஒரு சில இடங்களுக்கு சென்று வந்துள்ளீர்களா என கேட்டனர். 5 அதிகாரிகள் வந்து இருந்தனர். என்ன என்ன வியாபரம் செய்தனர் என கேட்டனர். சனோபர் எப்படி தெரியும் என மட்டும் கேட்டனர். முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தேன். எனக்கும் அரபிக் கல்லூரிக்கும் சம்பந்தம் இல்லை. என் மனைவியிடம் எந்த விசாரணை நடத்தவில்லை என தெரிவித்தார்.‘
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
