தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தன்பாலின ஈர்ப்பாளர்களுடைய தொடர் கோரிக்கையாக இருந்துவருகிறது. இதுதொடர்பான மனுக்கள் மீதான விசாரணையும், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வில் நடைபெற்றுவந்தது. மத்திய அரசு தரப்பிலிருந்து இந்த கோரிக்கைக்கு எதிராகவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இத்தகைய சூழலில், தன்பாலின ஈர்ப்பாளர்களின் கோரிக்கையானது, ஐந்து நீதிபதிகளின் அமர்வில் 3 – 2 என்ற தீர்ப்பின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. மேலும், இந்த தீர்ப்பில் சந்திரசூட், “சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அனைவருமே அவரவர் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க அரசியலமைப்பு உரிமை வழங்குகிறது. எனவே, தன்பாலின ஈர்ப்பாளர்களிடம் அரசு பாகுபாடு கட்டக்கூடாது” என்று கூறினார்.
நன்றி
Publisher: www.vikatan.com
