திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் இந்து முன்னணி அமைப்பினர் விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து, வழிபாடு நடத்தினர். அந்த சிலைகளை கரைப்பதற்கான விசர்ஜன ஊர்வலம், கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆரணி அண்ணா சிலை அருகே அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டன. பாதுகாப்புப் பணியில் 400-க்கும் மேற்பட்ட போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட இந்து முன்னணி அமைப்பின் வேலூர் கோட்டத் தலைவர் கோ.மகேஷ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சைக் கண்டித்து, கடுமையாகச் சாடிப் பேசியதாகக் கூறப்படுகிறது. உதயநிதியை மட்டுமின்றி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்தும், கோ.மகேஷ் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதாகச் சொல்லப்படுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
