Today News in Tamilnadu

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து உரு மாறிய கொரோனா மற்றும் பல்வேறு வகையான வைரஸ் என உருவாகி மக்களை ஒரு வழி ஆக்கிவிட்டது. அதைத்தொடர்ந்து, டெங்கு மற்றும் நிபா வைரஸ் தொற்று பரவி வருகிறது. மேலும் இதனை தடுப்பதற்க்கான கட்டுபாட்டு விதிமுறைகள் விதிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.
சமீப காலமாகவே தமிழகத்திலே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த தொற்றானது குறைவான எண்ணிக்கை இருந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதனால் கேரளா – தமிழகத்தின் எல்லை பகுதிகளின் வழியாக தமிகத்திற்கு இந்த நிபா வைரஸ் பரவக்கூடும் என எல்லைப் பகுதிகளின் வழியாக வருவோர்க்கு நோய் அறிகுறி இருக்கிறதா என சோதனை செய்கிறது. இவ்வாறு நோய் தொற்று பரவி வரும் நிலையில் தமிழகத்திலே பாதுகாப்பு நடவடிக்கை குறித்த கட்டுப்பாடுகள் அறிக்கப்படலாம் என தெரிய வருகிறது.
நன்றி
Publisher: jobstamil.in