எடுபட்டதா பாஜக-வின் கணக்கு?!
உஜ்ஜய்னில் கட்டப்பட்ட மஹாகால் லோக் வளாகம், ஓம்காரேஸ்வரில் கட்டப்பட்ட ஆதி சங்கராச்சாரியார் சிலை ஆகியவற்றையும் தங்கள் சாதனையாகச் சொன்னது பா.ஜ.க.
இதற்குப் போட்டியாக காங்கிரஸும் ஒரு மென் இந்துத்துவப் பிரசாரத்தில் ஈடுபட்டது. கமல்நாத் தன்னை ஒரு அனுமன் பக்தராகக் காட்டிக்கொண்டார். வலதுசாரி அமைப்பான பஜ்ரங் சேனாவை காங்கிரஸுடன் இணைக்கவும் அழைப்பு விடுத்தார். ஆனால், அது பலனளிக்கவில்லை. அதன் வெளிப்பாடு தான் இந்த தேர்தல் முடிவு என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்

இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 3 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.பி.க்களை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைத்தது பாஜக. மேலும், தேசிய அளவிலான மூத்த தலைவர்கள் 11 பேருக்கு சீட் கொடுத்தது. இது முன்னணி தலைவர்கள் பலருக்கும் உற்சாகமளிக்க தேர்தல் வேலைகள் பரபரத்ததும் பாஜகவின் வெற்றிக்கான காரணமாக கருதப்படுகிறது.
மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர சிங் தோமர் வீடியோ காலில் பேசுவது குறித்த வீடியோ சமீபத்தில் வெளியானது. மூன்று முக்கிய பணிகளை முடிக்க, 139 கோடி ரூபாய்க்கு தேவேந்திர சிங் தோமர் பேரம் பேசியதாக அதில் குறிப்பிடப்பட்டது. மேலும், மற்றொரு முக்கிய பணியை முடிக்க, 500 கோடி ரூபாய்க்கு தேவேந்திர சிங் தோமர் பேரம் பேசியதாக அதில் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த விஷயத்தை தீவிரமாக கையில் எடுத்த காங்கிரஸ் கட்சி, ம.பியில் ஊழல் ஆட்சி நடப்பதாகவும், பாஜக ஆட்சியில் கமிஷன் தலைவிரித்து ஆடுவதாகவும் தேர்தல் பிரசாரங்களில் குற்றம் சாட்டியது. ஆனால், இது போலியான வீடியோ என்று மறுத்தது. இந்த வீடியோவும் மத்திய பிரதேச அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
`சாதி வாரி கணக்கெடுப்பு மக்களை பிளவுபடுத்தும் வேலை’ என்ற வலுவான பரப்புரையை பாஜக முன் வைத்தது. எனவே ராகுலில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த பரப்புரை மக்கல் மனதில் பதியாமல் போனது எனலாம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
