அப்பா முதல்வராக இருந்தார். அண்ணன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். எனவே, தானும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை ஷர்மிளாவுக்கும் இருக்கிறது. இதுதான் சரியான வாய்ப்பு என்று அவர் கருதுகிறார்.

இதற்கிடையில், தெலங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஆனால், ஜெகனுக்கும் பாபுவுக்குமான மோதலைவிட, ஜெகனுக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே நடக்கவிருக்கும் மோதலைத்தான் ஆந்திரா அரசியல் பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். தெலங்கானாவில் செய்தது போன் இங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வாரா, அண்ணனுக்கு எதிராக தங்கையின் ஆக்ஷன் பிளான் எப்படி இருக்கும், அதற்கு அண்ணனின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
