மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் சுனில் கேதார். முன்னாள் அமைச்சரான சுனில் கேதார் நாக்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.150 கோடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2001-ம் ஆண்டு வங்கியில் சுனில் கேதார் முக்கிய பதவியில் இருந்த போது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ரூ.150 கோடி கடன் கொடுக்கப்பட்டது. அக்கடன் திரும்ப செலுத்தப்படவில்லை. இதையடுத்து வங்கியின் இயக்குநர்கள் அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். மேலும் சுனில் கேதார் உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், சுனில் கேதாருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 12 லட்சம் அபராதமும் விதித்தது.
2 ஆண்டுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால் சுனில் கேதாரின் பதவி பறிக்கப்பட்டது. சட்டமன்ற செயலாளர் ஜிதேந்திர போலே இது தொடர்பாக அளித்த பேட்டியில், “‘சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி இரண்டு ஆண்டுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டவுடன் எம்.எல்.ஏ-வின் பதவி பறிப்பு நடவடிக்கை உடனே தானாகவே தொடங்கி விடுகிறது. கோர்ட் உத்தரவு மற்றும் நாக்பூர் போலீஸாரின் கடிதம் எங்களுக்கு கிடைத்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ.வின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கோர்ட் தண்டனைக்கு தடை விதித்தால் சுனில் கேதாருக்கு எம்.எல்.ஏ.பதவி மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
எம்.எல்.ஏ.வின் வழக்கறிஞர் தேவன் இது குறித்து கூறுகையில், ”தண்டனைக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியும், ஜாமீன் வழங்க கோரியும் செசன்ஸ் கோர்ட்டில் செவ்வாறு கிழமை மனுத்தாக்கல் செய்ய இருக்கிறோம்” என்றார். 20 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் இப்போது காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தண்டனை கிடைத்து பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com