200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது காங்கிரஸ். சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், இன்னும் சில வாரங்களில்… அதாவது நவம்பர் மாதம் 25-ம் தேதி அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அங்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்குப் பிறகான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெற்று, முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான், மிசோரம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களை, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகத் தேசிய அரசியல் கட்சிகள் கருதுகின்றன.
ओम प्रकाश हुड़ला रो पड़े pic.twitter.com/OxzQXV5520
— Narendra khatana kemari (@NarendraKemari) October 26, 2023
அதனால், இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றியடைய வேண்டும் எனத் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கின்றனர் அரசியல் கட்சியினர். இந்த நிலையில், பண மோசடி வழக்கு தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா, மஹ்வாவிலுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் ஹட்லாவுக்குச் சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறை நேற்று திடீர் சோதனை நடத்தியது. தேர்தலுக்கு முன்னதான இந்த அமலாக்கத்துறையின் இந்த திடீர் சோதனை, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்த காங்கிரஸ் தலைவர்கள், தேர்தல் நெருங்கிவிட்டதால் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை பா.ஜ.க மிரட்டிவருவதாகவும், அதற்கு அடிபணிய மாட்டோம் என்றும் தெரிவித்தனர். குறிப்பாக முதல்வர் அசோக் கெலாட், நாட்டில் பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருப்பதாகவும், தனது அரசைக் கவிழ்க்க முடியாத காரணத்தால், இது போன்ற சோதனைகள் மூலம் பா.ஜ.க தன்னைக் குறிவைப்பதாகவும் விமர்சித்திருந்தார்.
ओम प्रकाश हुडला कह रहे हैं
"पेपर लीक मैं मेरे प्रति अपराध साबित हो जाए तो मैं आत्महत्या कर लूँगा नहीं तो किरोड़ी लाल मीणा आप जीना छोड़ देना” @ophudla @DrKirodilalBJP #RajasthanElection2023 pic.twitter.com/KyZ2lkIWDL
— अल्हड़ पत्रकार (@Rajesh__Jamaal) October 26, 2023
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஓம் பிரகாஷ் ஹட்லாவின் காணொளி ஒன்று வெளியாகி ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வீடியோவில் அவர் தன்னுடைய தாயாரைக் கட்டியணைத்து, கண்ணீர்விட்டு அழுகிறார். அவரின் தாயார் அவரை சமாதானப்படுத்த முயல்கிறார். மேலும், அவர் தன்னுடைய தாயிடமிருந்து ஆசி பெறுவதும் பதிவாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையின் விசாரணைக்காக வெளியே வந்தபோது, “பா.ஜ.க தலைவர் கிரோடி லால் மீனா நான் REET தேர்வு விவகாரத்தில் பணம் வாங்கியதாகக் குற்றம்சாட்டி, எனக்கு எதிராகச் சதி செய்திருக்கிறார்.
என்மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், அதே நாளில் நான் என் உயிரை மாய்த்துக்கொள்வேன். எனக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி, ஜெய்ப்பூர், மஹ்வா உட்பட ஆறு இடங்களில் சோதனை நடத்தியது. ஆனால் என்மீது குற்றத்தை நிரூபிக்கும்படியான ஒரு ரூபாயைக்கூட, அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தைரியம் இருந்தால் மஹ்வா தொகுதியில் போட்டியிட்டு பா.ஜ.க தலைவர் கிரோடி லால் மீனா தனது திறமையை நிரூபிக்கட்டும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
