“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முதல்வர் இன்னும் சிறப்பாக மேம்படுத்த வேண்டும்…” என்று காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி பேசியுள்ளார்.

சிவகங்கையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பல கொலை வழக்குகள் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளன. இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முதல்வர் இன்னும் மேம்படுத்த வேண்டும்.
அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ராகுல் காந்திக்குத்தான் உள்ளது. இந்தியாவில் ராகுல் காந்தியை விட தகுதியான நபர் வேறு யாரும் இல்லை. ராகுல் காந்தி பிரதமர் ஆனால்தான் ஏழை எளிய மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து வருகின்ற 29-ஆம் தேதி தி.மு.க-வுடன் பேச உள்ளோம். காங்கிரஸ் கட்சி சார்பில் 15 இடங்களை கேட்க உள்ளோம். காங்கிரஸில் இரண்டு அணிகளெல்லாம் இல்லை. உட்கட்சி பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்வோம்.
காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிட்டால் வெற்றிக்கு நிச்சயம் பாடுபடுவோம்.
பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவதால் முன்னேற்றம் கிடைக்காது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம்.

மேலும் அதிமுக 4 அணியாக பிரிந்து இருப்பதால் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை, காங்கிரஸ் கட்சி சார்பில் வரவுள்ள தேர்தல் அறிக்கை காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
