வரதட்சணை கொடுமை புகார்…! நேரில் சென்று சம்மனை பெற்றுக்கொண்டார் மேட்டூர் எம்எல்ஏ | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சதாசிவம் உள்ளார். இவரது மகன் சங்கருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த மனோலியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது தம்பதிக்கு ஒன்றைரை வயதில் பெண் குழந்தை இருக்கும் நிலையில் மனோலியா சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது கணவர் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார் பேபி, நாத்தனார் கலைவாணி ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக கூறியிருந்தார்.

இதனையடுத்து மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் உள்ளிட்ட நான்கு பேர் மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சதாசிவம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிற்கு சேலம் மாநகர போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். மேலும் மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவத்திற்கு வரதட்சணை புகார் வழக்கில் காவல்துறை சம்மன் அனுப்பியதையடுத்து சூரமங்கலம் காவல்நிலயத்திற்கு நேரில் சென்று சம்மனை பெற்றுக்கொண்டார் எம்எல்ஏ சதாசிவம்

Next Post

Tue Aug 22 , 2023

கர்ப்பகாலம்என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் கடினமான காலம் என்றே கூறலாம். இந்த நேரத்தில் எல்லாவற்றிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதன் போது, உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன, இதன் காரணமாக நமது உடலிலும், நமது மன நிலையிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதனால்தான் இந்த நேரத்தில் உணவு முதல் பல விஷயங்களை கவனித்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மக்களை அழகாகவும் இளைமையாகவும் வைக்க ஹேர் கலர் மிகவும் உதவுகிறது. […]

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *