இது குறித்து கோவை தி.மு.க-வினரிடம் பேசியபோது, “கட்சிக்கு காலங்காலமாக உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போதுதான், உற்சாகமாக வேலை செய்ய முடியும். கட்சியும் அப்படித்தான் வளரும். ஆனால் இங்கு மாவட்டத்துக்கு நியமிக்கப்படும் பொறுப்பு அமைச்சர், மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி ஒன்றியச் செயலாளர் பதவி வரை மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்தவர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. அதேபோல தி.மு.க-விலிருந்து கொண்டு அ.தி.மு.க-வின் ஸ்லீப்பர் செல்களாக இருப்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
கட்சிக்கு உண்மையாக உழைக்கும் நபர்களுக்கு இங்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. கோவை மாவட்டம் முழுவதும் இதே நிலைதான். இங்கு அ.தி.மு.க-வின் பி டீமாகத்தான் தி.மு.க காட்சியளிக்கிறது. இதனால் நொந்துபோய் பல சீனியர் உடன்பிறப்புகள் கட்சிப் பணியைவிட்டு, சொந்தப் பணியை கவனிக்க தொடங்கிவிட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த நிலை மாறினால் மட்டுமே இங்கு கட்சி வலுவாக இருக்கும் என்பதை தலைமை உணர வேண்டும்.” என்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com
