கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா கிருஷ்ணன் (65). ரியல் எஸ்டேட் அதிபராக இருந்தார். இவர் காளப்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவராக (சுயேச்சை) இருந்தவர். இதையடுத்து திமுகவில் இணைந்து, காளப்பட்டி பகுதிச் செயலாளராக இருந்தார்.

பிறகு திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்தார். கடந்த 2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில், கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டார்.
ஆனால் வெற்றி பெறவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை பொறுப்பாளரான பிறகு, கட்சியில் அவருக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால் கடந்த 2.5 ஆண்டுகளாக அவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில் காளப்பட்டி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பையா கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்னைகள் நிலவி வந்ததாகவும், அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பையா கிருஷ்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
