கோவை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம், இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற திங்கள்கிழமை கோவைக்கு வருகிறார். அப்போது செம்மொழி பூங்கா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் மாமன்றக் கூட்டத்தில், சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்கா அமைக்க ஒப்பந்தம் நிர்ணயிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி 47 ஏக்கரில், அமையவுள்ள செம்மொழி பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவுக்கு ரூ.99.44 கோடி, கோவை மாநகராட்சி உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செம்மொழி பூங்காவுக்குக் குழாய் அமைக்க ரூ.7.83 கோடி, செம்மொழி பூங்கா பல்நோக்கு மாநாட்டு மையம் கட்டுவதற்கு ரூ.25.56 கோடி, கலையரங்கம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைப்பதற்கு ரூ. 6.38 கோடி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: www.vikatan.com
