ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பொம்மை மருத்துவமனை – இங்கு உடைந்த பொம்மைகள் என்ன செய்யப்படுகின்றன?
பொம்மைகளுக்காகவே செயல்படும் தென்கொரிய மருத்துவமனை
இது தென்கொரியாவின் இஞ்சியோன் நகரத்தில் உள்ள பொம்மைகளுக்கான மருத்துவமனை. தங்களது குழந்தைகளின் உடைந்த பொம்மைகளைச் சரிசெய்ய இஞ்சியோன் நகர மக்கள் இங்கு வருகிறார்கள்.
கினிஸ் பொம்மை மருத்துவமனை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இங்கு பொம்மை மருத்துவர்களாக பணிபுரியும் அனைவரும் தன்னார்வலர்கள்.
“புதியது என்பதால் அது சிறந்த பொம்மை ஆகிவிடாது. பழைய பொம்மைகளைத் தூக்கி எறிந்துவிடாமல் அதை சரிசெய்து மீண்டும் பயன்படுத்துவது அல்லது நண்பர்களுக்குக் கொடுப்பது சிறந்தது என நான் நினைக்கிறேன்” என்கிறார் இங்கு பொம்மைகளை சரிசெய்ய அடிக்கடி வரும் ரியூ ஜி-யங்.
“இந்த பொம்மை மருத்துமனையில் 90,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள். இதுவரை 1 லட்சம் பொம்மைகள் சரிசெய்யப்பட்டுள்ளன” என்கிறார் பொம்மை மருத்துவர் கிம் கி-சுங்.
உடைந்த பொம்மைகளை சரிசெய்து கொடுக்கும்போது மகிழ்ச்சியாக உணர்வதாக கூறுகிறார் கினிஸ் பொம்மை மருத்துவமனையின் நிறுவனர் கிம் ஜோங்-இல்.
தொடர்ந்து பேசிய அவர், “ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், இங்கு தன்னார்வலர்களாக உள்ளனர். இந்தப் பணியைத் தொடர்ந்து செய்ய நிறைய பேர் முன்வருவார்கள் என நம்புகிறேன்.” என்று கூறினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
