
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியான சேதுபதி, 96 உள்ளிட்ட பல்வேறு படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று தனி மதிப்பு உள்ளது. இந்நிலையில், தற்பொழுது விஜய் சேதுபதியின் 50 வது படமான “மகாராஜா” என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், விடுதலை பாகம் 2 படைத்திலும் நடித்து வருகிறார்.
ALSO READ : சர்வதேச திரைப்பட விழா : வருகிற 14 ஆம் தேதி சென்னையில் தொடக்கம்! போட்டியில் 12 தமிழ் படங்கள்…
அடுத்தடுத்து படங்களில் பிஷியாக நடித்தி வரும் விஜய் சேதுபதி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளார். இந்த படத்திற்கு “ட்ரெயின்” என்று பெயரிடப்பட்டுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பபை இன்று(டிசம்பர் 1) தொடங்குவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான “சைக்கோ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்பொழுது இயக்கி வரும் “ட்ரெயின்” திரைப்படத்தின் மீதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இயக்குனர் மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இணையும் “ட்ரெயின்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in