சீனாவின் மஞ்சள் ஆறு அருகே சீனக் கடற்படையால், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கப்பல்களுக்கு வைக்கப்பட்ட பொறியில், அந்த நாட்டின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதில், சீன வீரர்கள் (கேப்டன், மாலுமி, அதிகாரிகள்) 55 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது தொடர்பாகச் சீன பாதுகாப்புத்துறை தரப்பிலிருந்து எந்தவிதத் தகவலும் வெளியாகாத நிலையில், சீன வீரர்கள் இத்தகைய சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாக பிரிட்டிஷ் உளவுத்துறை அறிக்கையிலிருந்து கசிந்த தகவலை, இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட `தி டைம்ஸ் பத்திரிகை” நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
சீனா இத்தகைய கூற்றைத் திட்டவட்டமாக மறுத்து, தங்கள் நீர்மூழ்கிக் கப்பல் அப்படியானதொரு விபத்தில் சிக்கி, அதில் யாரும் உயிரிழக்கவில்லை என்கிறது.
இருப்பினும், பிரிட்டிஷ் உளவுத்துறையிலிருந்து கசிந்த அறிக்கையில், 55 பேர் உயிரிழந்தது, சீனாவின் பி.எல்.ஏ கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் 093-ல் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக, செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஷாங்காய்க்கு வடக்கே ஷாண்டோங் மாகாணத்தில், மஞ்சள் ஆறு அருகே இருந்தபோது, தன்னுடைய சொந்த கடற்படையால் வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கியிருக்கிறது. அதன் காரணமாக ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கப்பலின் கேப்டன், அதிகாரிகள் உட்பட 55 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல், சீனக் கடற்படை அமைத்திருந்த சங்கிலி மற்றும் நங்கூரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
