மேலும், “கண்டன தீர்மானத்தை (impeachment) எதிர்கொண்ட நீதிபதி, தொடர்ந்து பதவியில் நீடிக்கலாமா… சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என நீதிபதி கூறியதற்கு, பதிலளித்த மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், “அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர்மீது கண்டன தீர்மானம் வந்தபோது,


அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது குறித்து அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் அவர் முன்பு ஆஜராகலாம் என தலைமை நீதிபதி கூறினார். அதனால், தொடர்ந்து நீதிபதியாகவும் அவர் நீடித்தார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அமைச்சரை நீக்குவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்றார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com