Senthil Balaji: தலைமை நீதிபதியிடம் செல்லும் ஜாமீன் மனு;

இதை தொடர்ந்து, எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்குச் சென்ற வழக்கறிஞர்கள் அருண், பரணிகுமார் ஆகியோர்… நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா… இல்லையா என்பது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி அறிவுறுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்றம்சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 31) மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோரின் அமர்வில் முறையிட்டார். அப்போது, “இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் ஏற்கெனவே விலகிய நிலையில், இந்த முறையீட்டு மனுவை எப்படி ஏற்பது?” என்று நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, “மாற்று அமர்வும் இன்று இல்லை என்பதால்தான் தங்களிடம் முறையிடுகிறோம். நிர்வாகரீதியான உத்தரவை பிறப்பித்தால்கூட போதுமானது” என்று தெரிவித்தார். எந்த வழக்கை, யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார் எனக் கூறிய நீதிபதி எம்.சுந்தர், இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என்றும் கூறினார்.

நீதிபதி கங்கபுர்வாலாநீதிபதி கங்கபுர்வாலா

நீதிபதி கங்கபுர்வாலா

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில் நாளை முறையிடப்படும் என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இது நிர்வாகரீதியான முடிவு என்பதால் இதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. தற்போது மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குகளை கவனித்து வரும் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, வரும் திங்கள் அன்றுதான் சென்னைக்கு வருகிறார். அப்போதுதான் ஜாமீன் குறித்து முடிவு செய்யப்படும் என மூத்த வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அதே நேரம் மதுரையில் மனு தாக்கல் செய்து காணொலி வாயிலாக ஜாமீன் குறித்து முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *