Meteorological Department Notification

கடந்த சில நாட்களாகவே லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரத்தினால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் இன்று (1.10.2023) முதல் 07.10.2023 வரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை மற்றும் கனத்த மழை பெய்யக்கூடும்.
Also Read >> காலேஜ் பீஸ் கட்ட முடியலையா? அரசின் மகிழ்ச்சியான செய்தி உங்களுக்குத்தான்… உடனே படிங்க!
மேலும், தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாக்குமரி, கோயம்புத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனையடுத்து, சென்னை மற்றும் புறநகர் இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் இருக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in