இது குறித்து யூனியன் அலுவலகர்கள் தரப்பில் பேசினோம், பொதுநிதியில் 15 நாற்காலிகள் வாங்கப்பட்டன. அந்த நாற்காலிகளை நாங்கள் பயன்படுத்தினோம். சேர்மன் உதவியாளரை அனுப்பி நாற்காலிகளை எடுத்து வர சொல்லியுள்ளார். நேற்று மதியம் அலுவலர்கள் சிலர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போதே எழுந்திருக்க சொல்லி நாற்காலிகளை உதவியாளர் எடுத்து சென்றார். அலுவலர்களை அவமானப்படுத்தும் செயலாக இது இருந்தது.
எந்த அலுவலர்களுடன் சேர்மனுக்கு சுமூகமான போக்கு இல்லை. நாற்காலி எடுத்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்ட பிறகு போராட்டத்தை விலக்கி கொண்டோம்.’ என்றார். பார்வதியின் கருத்தை அறிய அவரது செல்போனுக்கு பல முறை தொடர்பு கொண்டோம். ஆனால் அவரின் எண் நாட் ரீச்சபிள் என்றே வந்தது. அவர் இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்கும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவிட தயாராக இருக்கிறோம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
