லட்சத் தீவு – மாலத்தீவு: இருநாட்டு உறவை சில சமூக ஊடகப் பதிவுகள் சிக்கலாக்கியது எப்படி?

லட்சத் தீவு - மாலத்தீவு: இருநாட்டு உறவை சில சமூக ஊடகப் பதிவுகள் சிக்கலாக்கியது எப்படி?

லட்சத் தீவு - மாலத்தீவு பிரச்னை

பட மூலாதாரம், PRESIDENCY.GOV.MV

படக்குறிப்பு,

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த புகைப்படம்.

பிரதமர் நரேந்திர மோதி ஜனவரி 4 ஆம் தேதி லட்சத்தீவுகளின் படங்களைப் பகிர்ந்துகொண்டு, சுற்றுலாப் பயணிகள் இத்தீவுகளுக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்த பிறகு, மாலத்தீவு அமைச்சர்கள் சிலரின் மோதி மற்றும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் இரு நாடுகளுக்கும் இடையே புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளன.

இருப்பினும், இந்த விவகாரத்தை குளிர்விக்கும் வகையில், ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்களை அரசு சஸ்பெண்ட் செய்ததுடன், இதுபோன்ற செயல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறியது.

ஆனால் திங்களன்று, இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தியாவிற்கான மாலத்தீவு தூதர் இப்ராஹிம் ஷாஹிப்பை அழைத்து, பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து தீவிர கவலையை வெளிப்படுத்தியது.

உண்மையில், இந்த முழு விஷயமும் சமூக ஊடகங்களில் வேகம் பெற்றன.

ஜனவரி 4 ஆம் தேதி, பிரதமர் மோதி லட்சத்தீவுக்குச் செல்லும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டு, சுற்றுலாப் பயணிகள் லட்சத்தீவுக்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் இனி மாலத்தீவுக்குப் போகாமல் லட்சத்தீவுக்குச் செல்ல வேண்டும் என்று சமூக வலைதளங்களில் சிலர் கூறத் தொடங்கினர்.

லட்சத் தீவு - மாலத்தீவு பிரச்னை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

ஜனவரி 4 ஆம் தேதி, பிரதமர் மோதி லட்சத்தீவுக்குச் செல்லும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டு, சுற்றுலாப் பயணிகள் லட்சத்தீவுக்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

சில மாலத்தீவின் சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் அதிபர் முகமது முய்சுவின் அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் மாலத்தீவை லட்சத்தீவுடன் ஒப்பிடுவதை எதிர்மறையான கோணத்தில் பார்த்து, பிரதமருக்கும் இந்தியாவுக்கும் எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த கருத்துகளுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள சில பொதுவான பயனர்கள் மற்றும் பிரபலங்களும் சர்ச்சையில் குதித்து மாலத்தீவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்தனர்.

சுற்றுலாப் பயண நிறுவனமான ‘இஸ் மை ட்ரிப்’ மாலத்தீவுக்கான முன்பதிவைக் கூட ரத்து செய்தது.

அதே நேரத்தில், மாலத்தீவின் ஆதரவாளர்கள் தங்கள் நாட்டின் கடற்கரைகளின் படங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அதன் அழகைப் பற்றி பேசவும் தொடங்கினர்.

மாலத்தீவில் தற்போது அதிபர் முகமது முய்சுவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முய்சு மக்கள் தேசிய காங்கிரஸின் உறுப்பினராகவும், கூட்டணிக் கட்சியான மாலத்தீவு முன்னேற்றக் கட்சியின் வேட்பாளராகவும் தேர்தலில் போட்டியிட்டார்.

லட்சத் தீவு - மாலத்தீவு பிரச்னை

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற முய்சு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சீனப் பயணம் மேற்கொண்டார்.

ஏன் மாலத்தீவு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளது?

இந்தியாவுக்கு ஆதரவாகக் கருதப்படும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் முகமது சோலியை முகமது முய்சு தோற்கடித்தார். அவரது கட்சி தேர்தலுக்கு முன்பு ‘இந்தியா அவுட்’ என்ற முழக்கத்தை முன்னெடுத்திருந்தது.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்போவதாக முய்சு கூறியிருந்தார்.

பிபிசி உடனான அவரது பிரத்யேக உரையாடலில், இந்தியப் படைகள் அங்கு இருப்பது மாலத்தீவை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் குறிப்பாக சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே எல்லைப் பிரச்னையில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்றும் முய்சு கூறியிருந்தார்.

“மாலத்தீவு மிகச் சிறிய நாடு, பெரும் வல்லரசுகளுக்கு இடையே நடக்கும் பல சோதனையில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் அது இருக்க முடியாது. அதுபோன்ற சாத்தியமான எதையும் மாலத்தீவு செய்யாது” என்று கூறியிருந்தார்.

எனினும், மாலத்தீவில் இந்தியப் படைகள் இருப்பது குறித்து அதிக அச்சம் உருவாக்கப்படுவதாக முன்னாள் அதிபர் முகமது சோலி கூறினார்.

லட்சத் தீவு - மாலத்தீவு பிரச்னை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது லட்சத்தீவு பயணத்தின் போது கடற்கரையின் அழகைக் கண்டுரசித்தார்.

லட்சத்தீவு சர்ச்சை மற்றும் தேசியவாதம்

ஆனால் முய்சு மற்றும் அவரது கட்சியின் நகர்வுகள் ஆரம்பம் முதலே சீனாவின் பக்கம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர் துருக்கி மற்றும் அதன் பிறகு சீனாவுக்கும் சென்றதை இதற்குச் சான்றாக முன்வைக்கப்படுகிறது. முன்னதாக, மாலத்தீவின் எந்த புதிய அதிபரும் முதலில் இந்தியாவுக்கு வருவதையே வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

முய்சுவின் வெற்றிக்குப் பிறகு, மாலத்தீவில் இந்திய எதிர்ப்பு மற்றும் சீனாவுக்கு ஆதரவான குரல்கள் அதிகரித்து வருகின்றன. இது நான்கைந்து நாட்களுக்கு முன்பு தொடங்கிய லட்சத்தீவு-மாலத்தீவு சர்ச்சையிலும் காணப்பட்டது.

மாலத்தீவின் ஆதரவாளர்கள் தங்கள் தாய் நாட்டைப் புகழ்ந்து பாராட்டுக்களை வெளிப்படுத்தியபோதும், இந்தியா, இந்திய குடிமக்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி குறித்தும் ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டாலும், இந்திய ஆதரவாளர்களும் எந்த நிலையிலும் பின்வாங்கவில்லை.

இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் மாலத்தீவை புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்தனர். கருத்துகள் கூறப்பட்ட விதத்தை ஆராய்ந்தால், அவர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அதிகாரப்பூர்வமற்ற செய்தித் தொடர்பாளராகிவிட்டார்கள் என்பது போல் தோன்றியது.

லட்சத் தீவு - மாலத்தீவு பிரச்னை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

மாலத்தீவுப் பயணத்தின் போது பிரதமர் மோதி கடற்கரையில் ஓய்வெடுத்தார்.

லட்சத்தீவு சர்ச்சைக்குப் பிறகு, பெரிய இந்திய பயண நிறுவனமான ‘ஈஸ் மை ட்ரிப்’ இன் தலைமை நிர்வாக அதிகாரி பிரசாந்த் பிட்டி, தனது நிறுவனம் மாலத்தீவுக்கான முன்பதிவை நிறுத்திவிட்டதாகக் கூறினார். அவரைப் பொறுத்தவரை, தேசியவாதம் என்பது எந்த ஒரு ‘தனிப்பட்ட நன்மைக்கும்’ மேலானது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, தனது நிறுவனத்தின் மாலத்தீவு முன்பதிவு ரத்து செய்யப்பட்டது குறித்து தெரிவித்த அவர், லட்சத்தீவு மற்றும் அயோத்தி போன்ற இடங்கள் சர்வதேச சுற்றுலாத் தலங்களாக உருவாக வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார் தனது எக்ஸ் பதிவில், “நம்முடைய அண்டை வீட்டாரிடம் நல்ல அணுகுமுறை உள்ளது. ஆனால் எந்த காரணமும் இல்லாமல் வெறுப்பை ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்? நான் பல முறை மாலத்தீவுக்கு சென்றுள்ளேன். எப்போதும் பாராட்டியிருக்கிறேன். ஆனால் எங்களுக்குக் கண்ணியம் மிக முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார். இப்போது இந்திய தீவுகளுக்குச் சென்று நம் நாட்டின் சுற்றுலாவுக்கு உதவுவோம்,” என எழுதியுள்ளார்.

இந்தக் கருத்துகளுக்குப் பிறகு, இவ்விரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பர உறவுகள் போன்ற தீவிரமான பிரச்னைகளில் அரசாங்கங்களின் நிலைப்பாடு சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் ஆத்திரமூட்டும் கருத்துகளால் பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

ஊடகச் செய்திகளின்படி, சமூக ஊடகங்களில் இந்தியா மற்றும் நரேந்திர மோதி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்த அமைச்சர்களை மாலத்தீவு அரசாங்கம் இடைநீக்கம் செய்துள்ளது, ஆனால் இந்திய அரசாங்கம் மாலத்தீவு தூதரை வரவழைத்து ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து, இதுபோன்ற இரண்டு கருத்துகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நாடுகளுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான விவாதங்களை சமூக ஊடகங்கள் தீர்மானிக்குமா என்று கேட்குமளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

லட்சத் தீவு - மாலத்தீவு பிரச்னை

பட மூலாதாரம், @akshaykumar/ X

படக்குறிப்பு,

லட்சத்தீவுக்கும், இந்தியாவுக்கும் ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

சமூக ஊடகங்களில் வெளியுறவுக் கொள்கை பற்றி விவாதிப்பது எவ்வளவு பொருத்தமானது?

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் தேசியவாதத்தின் இத்தகைய குரல் வெளிப்பாட்டின் ஆபத்துகள் என்னவாக இருக்கும்?

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அமைதி மற்றும் மோதல் தீர்வுக்கான நெல்சன் மண்டேலா மையத்தின் உதவிப் பேராசிரியர் பிரேமானந்த் மிஸ்ரா கூறும்போது, ​​“மாலத்தீவின் மூன்று துணை அமைச்சர்களின் தவறு என்னவென்றால், அவர்கள் பிரபலமான அரசியல் கதையை மாலத்தீவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக மாற்றியது உங்களுக்கு நினைவிருக்கலாம். நூபுர் ஷர்மா அமைச்சர் இல்லை. அவர் பாஜகவின் செய்தித் தொடர்பாளர். ஆனால் அவரது ஒரு கருத்து இந்தியாவை மிகவும் சிக்கலில் ஆழ்த்தியது,” என்றார்.

சித்தாந்தத்தின் அடிப்படையில் வெளியுறவுக் கொள்கையை இயக்க முடியாது என்று பிரேமானந்த் மிஸ்ரா நம்புகிறார். இந்தியா போன்ற பெரும் வல்லரசுகளால் இத்தகைய வெளியுறவுக் கொள்கையை உருவாக்கி அதன் மூலம் செயல்பட முடியாது என்றும் அவர் கருதுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “மாலத்தீவில் இந்தியாவுக்கான இடத்தைப் பெறும் வாய்ப்புக்கள் வற்றிவிடாமல் இருக்க, மாலத்தீவு தொடர்பாக எழும் உணர்வுகளை இந்திய அரசு விரைவில் கட்டுப்படுத்த வேண்டும்,” என்கிறார்.

“சமூக ஊடகங்களில் சில நேரங்களில் பெரும் தீவிர விவாதம் நடக்கிறது. சில நேரங்களில் அது ஆழமற்றது. எனவே, ஆழமற்ற சித்தாந்தத்தின் தாக்கத்தால், தேசியவாதத்தை எந்த நாடும் மற்றொன்றை விட கொடுமையாக பார்க்கும் அளவிற்கு கொண்டு செல்லக்கூடாது. இந்தியா ஒரு முதிர்ந்த ராஜதந்திரம் மிக்க நாடாக சிலவற்றை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.”

லட்சத் தீவு - மாலத்தீவு பிரச்னை

பட மூலாதாரம், PRESIDENCY.GOV.MV

படக்குறிப்பு,

முய்சுவின் இந்திய எதிர்ப்புக்கு நாட்டில் பலதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

‘சமூக ஊடகங்களை புறக்கணிக்க முடியாது’

பேராசிரியர் பிரேமானந்த் மிஸ்ரா பேசியபோது, “இந்த விவகாரத்தில் மாலத்தீவு நடவடிக்கை எடுத்துள்ளது, இந்தியாவும் தனது தூதரை அழைத்து தனது கருத்தை முன்வைத்துள்ளது. இப்போது இந்தியா இந்த விஷயத்தை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார்.

இருப்பினும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து சமூக ஊடகங்கள் விவாதம் செய்வதை நிறுத்த முடியாது என்று வெளியுறவுக் கொள்கையை அறிந்த சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சீன ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் அரவிந்த் யெல்லேரி கூறும்போது, ​​“இந்தியாவுடன் மிக நெருங்கிய தொடர்புடைய நாடு என்பதால், மாலத்தீவு குறித்து இந்திய சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்வினை இருந்தது. ஏராளமான இந்திய சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்கின்றனர். இது மாலத்தீவை பிரபலமாக்குகிறது. அந்நாட்டுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. ஆனால் சமூக ஊடக பயனர்களும் மாலத்தீவின் அமைச்சர்களும் இந்தியா மற்றும் அதன் பிரதமர் மீது ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால், மக்கள் கோபமடைந்துள்ளனர்,” என்றார்.

“சமூக ஊடகங்களில் இதுபோன்ற விவாதங்கள் இந்திய வெளியுறவுக் கொள்கையை பலவீனப்படுத்தும் என்று சொல்வது தவறானது. இதுபோன்ற விவாதங்கள் நடக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.”

தொடர்ந்து பேசிய அரவிந்த் யெல்லேரி, “சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் அல்லது விவாதங்களை நடத்துபவர்கள் பொதுவாக நல்ல பின்னணி கொண்டவர்கள் மற்றும் தீவிர விவாதங்களை நடத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர். ஆனால் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதை சமூக ஊடகங்கள் தீர்மானிக்க முடியாது என்பதும் முக்கியம்,” என்றார்.

லட்சத் தீவு - மாலத்தீவு பிரச்னை

பட மூலாதாரம், PRESIDENCY.GOV.MV

படக்குறிப்பு,

முய்சு சீனாவுக்கு ஆதரவான நிலை எடுத்துள்ளது, இந்தியா – மாலத்தீவு உறவை பெரிதும் பாதித்துள்ளது.

மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிரான அணுகுமுறை அதிகரித்து வருகிறதா?

இருப்பினும், டெல்லி ஷஹீத் பகத் சிங் கல்லூரியின் உதவிப் பேராசிரியரும், கிழக்கு ஆசிய விவகாரங்களில் நிபுணருமான ரித்யுஷா திவாரி இது குறித்துப் பேசியபோது, “இந்த வகையான தீவிர தேசியவாதம் அரசியல் பிரச்சனைகளை உருவாக்கலாம். இது உள்நாட்டு அரசியலுடன் தொடர்புபடுத்தப்படலாம் என்பதுடன் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் தாக்கம் ஏற்படுத்தும் இந்த போக்கு உறவுகளை எதிர்மறையாக பாதிக்கலாம்,” என்றார்.

வரும் நாட்களில் இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியலில் இதுபோன்ற எதிர்வினைகளை காணலாம் என்று ரித்யுஷா திவாரி கூறுகிறார். மேலும் அதை சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் கருதுகறார்.

மாலத்தீவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்படும் எதிர்கட்சி அரசியலுக்கு அங்கே நிறைய இடம் இருக்கிறது.

லட்சத்தீவு-மாலத்தீவு பிரச்னையில் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோதிக்கும் எதிராக கருத்து தெரிவித்த பிறகு, இந்தியாவுக்கு ஆதரவாக பிரபலங்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் முன்வந்த விதம் இதை நிரூபித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இதுபோன்ற கருத்துக்களை ஏற்க முடியாது என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார். இது மாலத்தீவு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

லட்சத் தீவு - மாலத்தீவு பிரச்னை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

லட்சத்தீவுக்கூட்டத்தில் ஏராளமான அழகான சிறிய தீவுகள் இடம்பெற்றுள்ளளன.

இரு நாடுகளுக்கும் இடையேயான பல ஆண்டுகால நட்புறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற உணர்ச்சியற்ற கருத்துகளை அனுமதிக்கக் கூடாது என்று முன்னாள் அதிபர் இப்ராகிம் சோலி கூறினார். சோலி மாலத்தீவு அதிபராக இருந்தபோது இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவுகள் நெருக்கமாக இருந்தன.

மாலத்தீவின் வேறு சில தலைவர்களும் இந்தியா பற்றி கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாலத்தீவு முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் கூறுகையில், “பொதுமக்களுக்காகப் பணியாற்றும் பதவிகளில் இருப்பவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். சமூக ஊடக செயல்பாடு இனி இருக்காது என்பதை அவர்கள் உறுதிப்படுத்தவேண்டும். நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பை மக்கள் ஏற்க வேண்டும்,” என்றார்.

மாலத்தீவின் மற்றொரு முன்னாள் அதிபரான முகமது நஷீத், மாலத்தீவின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு முக்கிய பங்காற்றும் ஒரு முக்கிய நட்பு நாட்டிடம் எப்போதும் நல்ல உறவைக் கடைபிடிக்கவேண்டும் என்றும், இதுபோன்ற போக்கை முய்சுவின் அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

மாலத்தீவில் இந்தியாவுக்கு கிடைத்து வரும் இந்த ஆதரவை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மாலத்தீவுக்கு எதிராக இந்தியா ஒரு வலுவான நடவடிக்கையை எடுக்கக்கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர். இந்திய ஆதரவு நிலையில் இருக்கும் மக்கள் கூட தங்கள் நிலைப்பாட்டை சிந்திக்க வேண்டும். மாபெரும் சக்தியாக இருக்கும் இந்தியா, தனது முதிர்ச்சியைக் காட்டி, இந்த விஷயத்தை இங்கே நிறுத்தினால் நல்லது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *