ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோவை கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படுகிறது
தூய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு
கோவை கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படுகிறது. பொதுமக்கள் பங்களிப்புடன் இந்த திட்டம் கடந்த ஒரு மாதமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை கூடலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படுகிறது.
பிறந்த நாள், திருமண நாள், அல்லது வேறு ஏதாவது தருணங்களை கொண்டாட விரும்புவோர், 3000 முதல் 4000 ரூபாய் கொடுத்தால், அந்த பணத்தை கொண்டு நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கப்படும்.
ஒருவர் ஒரு வருடத்தில் ஒரு நாள் மட்டுமே இந்த நன்கொடையை வழங்க முடியும். பணம் கொடுப்பது மட்டுமல்லாமல் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து தங்கள் சிறப்பான நாளை கொண்டாடவும் செய்யலாம்.

நன்றி
Publisher: பிபிசிதமிழ்
