பிரக்ஞானந்தா vs மேக்னஸ் கார்ல்சன்: மகுடம்சூடப் ‘போரிடும்’ தமிழ்நாட்டுப் பையன்

பிரக்ஞானந்தா vs மேக்னஸ் கார்ல்சன்: மகுடம்சூடப் 'போரிடும்' தமிழ்நாட்டுப் பையன்

பிரக்ஞ்சானந்தா vs மேக்னஸ் கார்ல்சன்: செஸ் உலகக்கோப்பையை இந்த இளம் தமிழ்நாட்டுப் பையன் கைப்பற்றுவாரா?

பட மூலாதாரம், FIDE

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து இந்தியாவுக்காக செஸ் உலகக்கோப்பையில் களமிறங்கினார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா.

உலக செஸ் ரசிகர்கள் மத்தியில் மேக்னஸ் கார்ல்சன் என்றாலே ஒருவித புத்துணர்ச்சி பெருகிவிடும். அத்தகைய நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு முதல் சுற்றை டிராவில் முடித்துள்ளார் பிரக்ஞானந்தா.

இந்நிலையில் தற்போது இரண்டாவது சுற்றில் வெற்றி வாகை சூடி கோப்பையைக் கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்துள்ளது.

இது இந்திய செஸ் ரசிகர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதினெட்டு வயதான பிரக்ஞானந்தா திங்கள் கிழமையன்று டை-பிரேக்கரில் உலகின் 3ஆம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

மேக்னஸ் கார்ல்சன், நிஜாத் அபாசோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

பிரக்ஞ்சானந்தா vs மேக்னஸ் கார்ல்சன்: செஸ் உலகக்கோப்பையை இந்த இளம் தமிழ்நாட்டுப் பையன் கைப்பற்றுவாரா?

பட மூலாதாரம், FIDE

சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் 32 வயதான மேக்னஸ் கார்ல்சன் விளையாடுவது இதுவே முதல்முறை.

இந்த மாதத் தொடக்கத்தில்தான் 18 வயதை எட்டிய பிரக்ஞானந்தா, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் மிக இளம் வயதினர் ஆவார்.

உலக சாம்பியன் பட்டத்திற்கான சவாலை தீர்மானிக்க அடுத்த ஆண்டு நடைபெறும் கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற உலகின் மூன்றாவது இளைய நபர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். கார்ல்சன் மற்றும் அமெரிக்க செஸ் மேதை பாபி ஃபிஷ்ஷர் இருவரும் 16 வயதாக இருந்தபோது இந்தப் போட்டிக்குத் தகுதி பெற்றார்கள்.

பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து கூறிய பிரபல முன்னாள் உலக சாம்பியன்கள்

பிராக் என்று செஸ் உலகில் பிரபலமாக அறியப்படும் பிரக்ஞானந்தா இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய செஸ் வீரர்களில் ஒருவர்.

இந்த விளையாட்டின் வரலாற்றிலேயே இளைய சர்வதேச செஸ் மாஸ்டர் ஆனபோது அவருக்கு 10 வயதுதான். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டில் அவர் உலகின் இரண்டாவது இளைய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

பட மூலாதாரம், FIDE

இந்த விளையாட்டின் வரலாற்றிலேயே இளைய சர்வதேச செஸ் மாஸ்டர் ஆனபோது அவருக்கு 10 வயதுதான். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2018ஆம் ஆண்டில் அவர் உலகின் இரண்டாவது இளைய செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

கடந்த ஆண்டு, ஆன்லைன் ரேபிட் போட்டியான ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸில் கார்ல்சனை அவர் தோற்கடித்தார். அதுமட்டுமின்றி, நார்வே கிராண்ட்மாஸ்டரை தோற்கடித்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையும் பிரக்ஞானந்தாவையே சேரும்.

செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு செஸ் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியரும் இவரே.

பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியபோது, அவருக்கு விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் முன்னாள் உலக சாம்பியன்களான சூசன் போல்கர், கேரி காஸ்பரோவ் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திங்கள் கிழமையன்று தனது வெற்றி குறித்துப் பேசிய பிரக்ஞானந்தா, “கார்ல்சனுக்கு எதிராக விளையாடுவேன் என எதிர்பார்க்கவில்லை. நான் எனது சிறந்த விளையாட்டைக் கொடுக்க முயல்வேன், பிறகு போட்டி எவ்வாறு செல்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பேன்,” என்று கூறினார்.

செஸ் உலகை கலக்கும் பிரக்ஞானந்தா யார்?

பிரக்ஞ்சானந்தா vs மேக்னஸ் கார்ல்சன்: செஸ் உலகக்கோப்பையை இந்த இளம் தமிழ்நாட்டுப் பையன் கைப்பற்றுவாரா?

பட மூலாதாரம், FIDE

நெற்றியில் பட்டை, எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரிச்சீவப்படாத தலைமுடி, அமைதியான முகம். எளிமையான முகத்தோற்றத்துடன் பெருஞ்சாதனைகளுக்கும் மிகச் சிறிய புன்னகையை வெளிப்படுத்துகிறார், சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா.

பிரக்ஞானந்தாவின் சாதனையை இரண்டு வழிகளில் பார்க்கலாம், ஒருபுறம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வேகமாக முத்திரை பதிக்கிறான். இவரது தந்தை ரமேஷ்பாபு போலியோவால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருபவர். தற்போது சென்னை கொரட்டூர் கிளையின் மேலாளராக உள்ளார். இது ஒரு அம்சம்.

பிரக்ஞானந்தாவின் வாழ்க்கையின் மற்றொரு அம்சம் என்னவென்றால், அவரது நான்கு வயது மூத்த சகோதரி வைஷாலி ரமேஷ் பாபுவும் செஸ் உலகில் நன்கு அறியப்பட்ட வீராங்கனை மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர் என்பதுதான்.

அதாவது பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டில் முன்னேறுவதற்கான வசதி, வாய்ப்புகளை அவரது சகோதரி வீட்டிலேயே செய்து கொடுத்திருக்கிறார். இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவர்களின் தந்தை ரமேஷ் பாபுவுக்கும் செஸ் விளையாட்டுக்கும் சம்பந்தமே இல்லை.

பிரக்ஞானந்தா செஸ் மேதை ஆனதன் பின்னணி

பிரக்ஞ்சானந்தா vs மேக்னஸ் கார்ல்சன்: செஸ் உலகக்கோப்பையை இந்த இளம் தமிழ்நாட்டுப் பையன் கைப்பற்றுவாரா?

பட மூலாதாரம், RAMESH BABU

செஸ் விளையாட்டுக்கும் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படியிருக்க தனது மகன் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார் என்ற கதையை பிரக்ஞானந்தா 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றபோது பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

“எனது மகள் வைஷாலியை செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தேன். அவள் நன்றாக விளையாடினாள். ஆனால், செஸ் போட்டிகளில் பெரிய நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் நெடுந்தூரம் பயணம் செய்யவேண்டும்.

குடும்ப சூழ்நிலை, பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு என் மகனை செஸ் விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடாது என்று திட்டமிட்டேன்,” என்றார் ரமேஷ் பாபு.

ஆனால், தனக்கு 4 வயது இருக்கும்போதே அக்காவுடன் செஸ் விளையாட்டில் அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளார் பிரக்ஞானந்தா.

பிரக்ஞ்சானந்தா vs மேக்னஸ் கார்ல்சன்: செஸ் உலகக்கோப்பையை இந்த இளம் தமிழ்நாட்டுப் பையன் கைப்பற்றுவாரா?

பட மூலாதாரம், PRAGGNANANDHAA R./ FACEBOOK

தன் வயது சிறுவர்களுடன் நேரத்தைச் செலவிடாமல் செஸ் போர்டில் இருக்கும் அந்த 64 கட்டங்களின் மீது அவர் கொண்டிருந்த காதல் ரமேஷ் பாபுவின் மனதை மாற்றியது.

தன்னைவிட நான்கு வயது மூத்தவரான அவரது அக்காவிடம் இருந்துதான் செஸ் விளையாட்டின் அடிப்படையை பிரக்ஞானந்தா கற்றுக்கொண்டார்.

வீட்டை நிரப்பியுள்ள கோப்பைகள்

சென்னை புறநகரில் நான்கு அறை கொண்ட ரமேஷ் பாபுவின் வீட்டில் அதிகமுள்ள பொருட்கள் கோப்பைகளே. பெரும்பாலானவை சர்வதேச போட்டிகளில் அக்காவும் தம்பியும் வென்ற கோப்பைகள்.

பிரக்ஞானந்தா, எட்டு வயதுக்கு உட்பட்டோர், பத்து வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலக இளம் செஸ் சாம்பியன்ஷின் போட்டியில் 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

ஐந்து வயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியவர், 2016ஆம் ஆண்டு உலகின் இளம் சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற புகழை அடைந்தார். இன்னும் தொடர்ந்து புகழின் உச்சியை நோக்கி வளர்ந்துகொண்டே இருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *