ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பஞ்சாபில் குடியேறினார் குல்தீப் சிங் போபராய்
‘டங்கி’ வழியில் அமெரிக்கா சென்ற இளைஞருக்கு என்ன நடந்தது?
சமீபத்தில் வெளியான ஷாரூக்கானின் ‘டங்கி’ திரைப்படம் சட்டவிரோத குடியேற்றத்தின் மூலம் சிறந்த வாழ்க்கையைத் தேடி வெளிநாடு செல்லும் இளைஞர்களின் கதையை சித்தரித்திருந்தது. பஞ்சாப் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு, குறிப்பாக அமெரிக்கா செல்வதற்கு ‘டங்கி’ பாதையில் முயற்சி செய்கிறார்கள்.
ஃபரித்கோட் மாவட்டத்தில் உள்ள கோட்காபுரா பகுதியைச் சேர்ந்த குல்தீப் சிங் போபராய் என்பவர் ‘டங்கி’ பாதையில் அமெரிக்கா செல்ல முயன்றார். குல்தீப் சிங் மிகவும் ஆபத்தான பாதைகளில் பயணம் செய்து, பல நாடுகளைக் கடந்து அமெரிக்காவை அடைந்தார்.
குல்தீப் சிங், மெக்சிகோவுக்குச் செல்வதற்கு ஒரு வாகனத்தின் பின்புறத்தில் படுத்துக்கொண்டு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது என விளக்குகிறார். அவர், 100-150 ஆண்களுடன் பயணித்தார். உள்ளூர் மாஃபியாக்களிடமிருந்து நிறைய ஆபத்துகள் இருந்தன. ஆனால், இறுதியாக குல்தீப் சிங் ஒரு ஆற்றைக் கடந்து மெக்ஸிகோவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைந்தார்.
குல்தீப் சிங் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்ததாகக் கூறி தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டார். இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி அமெரிக்காவில் தஞ்சம் கோரிய குல்தீப் சிங்கின் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. இறுதியில் அவர் நாடு கடத்தப்பட்டார்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
