எரிமலை வெடிப்பு நடக்கும் முன்பே தடுக்க முடியுமா? அதில் உள்ள ஆபத்து என்ன?

எரிமலை வெடிப்பு நடக்கும் முன்பே தடுக்க முடியுமா? அதில் உள்ள ஆபத்து என்ன?

எரிமலை வெடிப்பை கட்டுப்படுத்த முடியுமா? என்ன சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், Getty Images

சில எரிமலைகளின் மோசமான விளைவுகளை நாம் முன்பே தணிக்க முடியும், ஆனால் வெடிப்பதை முழுவதுமாக நிறுத்த முடிந்தால்?

அப்படி செய்வதற்கு முன், அதில் உள்ள அபாயங்கள் மற்றும் நெறிமுறை சந்தேகங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கேமரூனில் 1986ஆம் ஆண்டு ஓர் இரவில், அங்கிருந்து ஒரு எரிமலை ஏரியிலிருந்து கரிம வாயு(CO2) கசிவு ஏற்பட்டது. அந்த வாயு மெல்ல மெல்லக் கீழே படர்ந்து, அருகிலிருந்த பண்ணைகள், விவசாய நிலங்கள், மக்களின் குடியிருப்புகள் என அனைத்து இடங்களையும் சூழ்ந்தது.

இதனால், அப்பகுதியில் இருந்த 1700க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சுத் திணறலால் உயிரிழந்தனர்; 3000க்கும் மேற்பட்ட கால்நடைகளும் மூச்சுத் திணறி உயிரிழந்தன.

இந்த “லிம்னிக்” வெடிப்பு என அழைக்கப்படும் நியோஸ் ஏரியின் பேரழிவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. அதனால், இனி அப்படி ஒரு சூழல் ஏற்படாமல் இருக்கவும், அவற்றைத் தடுக்கவும் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு அறுவுறுத்தப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் ஏரியின் அடிப்பகுதியில் இருந்து ஒரு எளிய தோட்டக் குழாய் மூலம் கொடிய வாயுவை வெளியேற்றத் தொடங்கினர். பின்னர், பெரிய குழாய்களையும் இந்தப் பணிக்காகப் பயன்படுத்தினர்.

எரிமலை வெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்த முயற்சியில் ஆபத்து இல்லாமல் இல்லை. இந்த முயற்சி மற்ற வாயு கசிவைத் தூண்டியிருக்கலாம். ஆனால், இந்த முயற்சி பயனளித்தது. அதற்குப் பிறகு, அப்பகுதியில் கரிம வாயு(CO2) கசிவின் அளவு பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. இதுவொரு வெற்றிகரமான முயற்சியாகவும் பார்க்கப்பட்டது.

எரிமலையால் ஏற்படும் பேரழிவைத் தடுக்கும் பல்வேறு முயற்சிகளில், இதுவும் ஒன்று. எடுத்துக்காட்டாக, கடந்த வாரம், ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஒரு எரிமலை வெடிக்கத் தொடங்கியது. அங்கிருந்த அதிகாரிகள் பாறை மேடுகளைப் பயன்படுத்தி, அந்த எரிமலையின் ஓட்டத்தை மடைமாற்றி இயக்க முயன்றனர்.

அதேபோல, 1970களில் ஹெய்மேய் என்ற எரிமலையின் வெளியேற்றத்தைக் குளிர்விக்க கடல்நீரைப் பயன்படுத்த முயன்றனர். ஹவாய் போன்ற மற்ற இடங்களில், எரிமலைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் விமானங்களில் இருந்து குண்டுளை வீசினர். ஆனால், அது பயனளிக்கவில்லை. எதிர்காலத்தில், எரிமலையின் மாக்மா பகுதியில் துளையிட்டு வாயுவை வெளியேற்ற முயற்சி எடுக்கலாம்.

இருப்பினும், இந்த நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளால், அபாயங்களும் உள்ளது, நன்மைகளும் உள்ளது. மேலும், இந்த வழிமுறைகள் அனைத்தும் நெறிப்படி சரியா என்ற சந்தேகம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் எரிமலை நிபுணர் மைக்கேல் காசிடி மற்றும் அவரது சகாக்கள் எரிமலை புவி பொறியியலின் நெறிமுறைகளை ஆழமாக ஆராய்ந்து வருகின்றனர். இதில், நமக்கு எழும் முக்கியமான கேள்வி என்னவென்றால், எரிமலைகளை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா, என்பது தான்.

எரிமலை வெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

எரிமலையில் துளையிட்டால் பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியுமா?

குறைந்தது ஒரு நூற்றாண்டு காலமாக மனிதர்கள் எரிமலைகளைப் பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, 1919ஆம் ஆண்டில், இந்தோனீசியாவில் உள்ள கெலுட் மலையில் லாஹார் எனப்படும் எரிமலையில் இருந்து வெளியேறிய தீப்பிழம்பால் 5,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க, பொறியாளர்கள் ஏரியில் இருந்து வரும் தீப்பிழம்பை வெளியேற்ற பள்ளம் வழியாக சுரங்கம் தோண்டினர்.

கடந்த 1951இல் அடுத்த முறை நடந்த எரிமலை வெடிப்பின்போது, ஏரியில் இருந்து வெளியேறிய தீப்பிழம்பின் அளவு 90% குறைந்துவிட்டது. எனவே எரிமலைக் குழம்பு குறைவான பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆனால், கெலுட் மலையில் துளையிடல் எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தியது. காலப்போக்கில், அது எதிர்பாராத விதமாக ஏரியை ஆழப்படுத்தியது. அதனால் 1966இல் அது வெடித்தபோது, 300 பேரைக் கொல்லும் அளவுக்கு தீப்பிழம்பு வெளியேறியது.

சில நேரங்களில், ஒரு எரிமலையில் துளையிடுவதால் முற்றிலும் எதிர்பாராதவையும் நடக்கலாம். சமீபத்திய ஆண்டுகளில் ஐஸ்லாந்து, ஹவாய் மற்றும் கென்யாவில், அறிவியல் மற்றும் புவிவெப்ப துளையிடும் தளங்களில் ஆபரேட்டர்கள் தற்செயலாக மாக்மா பகுதியில் துளையிட்டபோது, அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவங்களால், எரிமலையின் ஒரு பகுதியில் துளையிடுவதன் மூலம் எரிமலை வெடிப்பின்போது ஏற்படும் பாதிப்பு மற்றும் விளைவுகளைத் தணிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொதுவாக, எரிமலை வல்லுநர்கள் தங்கள் துறையில் புவி பொறியியலைத் ஏற்றுக்கொள்வதில் எச்சரிக்கையாக இருப்பதாகக் கூறுகிறார் காசிடி.

வழக்கமாகக் கட்டுப்படுத்தப்படும் காட்டுத்தீ, வெள்ளம் அல்லது பனிச்சரிவுகள் போன்ற இயற்கை அபாயங்களைப் போல, எரிமலையைக் கட்டுப்படுத்துவதை விஞ்ஞானிகள் அணுகவில்லை. எரிமலையில் இருந்து வெளியேறும் வாயுவைக் கட்டுப்படுத்துவது, தீப்பிழம்பை மடைமாற்றுவது, எரிமலை மீது குண்டுவீசுவது போன்ற யோசனைகளை மிக எச்சரிக்கையுடன் அணுகுகின்றனர் விஞ்ஞானிகள்.

“எரிமலை வல்லுநர்கள் அதைப் பற்றிப் பேச விரும்புவதில்லை,” என்கிறார் காசிடி. “அபாயத்தைப் பற்றி எங்களால் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் விஞ்ஞானிகள், தலையீட்டாளர்கள் அல்ல,” என்ற கருத்து விஞ்ஞானிகள் மத்தியில் உள்ளதாக காசிடி கூறினார்.

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எரிமலையியல் என்ற ஒரு முழுமையான அறிவியல் துறை தோன்றியதில் இருந்தே முன்னெச்சரிக்கையாக இருப்பதே பொதுவான கொள்கையாக உள்ளதாகவும் காசிடி கூறுகிறார்.

எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் புவியியல் ஆய்வுத்துறையின் இணையதளத்தில், யெல்லோஸ்டோன் சூப்பர் எரிமலையின்(Yellowstone supervolcano) வெடிப்பைத் தடுக்கத் துளையிடும் யோசனை நிராகரிக்கப்பட்டது.

ஏனெனில், மாக்மா பகுதியில் துளையிடுவதால், பல எதிர்பாராத எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர். ஆனால், அது என்ன விளைவுகள், எப்படி நடக்கும் என இணையதளத்தில் விவரிக்கப்படவில்லை.

இருப்பினும், எரிமலை புவிசார் பொறியியல் மூலம் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்பது தெளிவாகிறது.

யெல்லோஸ்டோனைப்(Yellowstone) போலவே, உலகம் முழுவதும் சூப்பர் எரிமலைகள் உள்ளன. உதாரணமாக, இத்தாலியில், நேபிள்ஸில் உள்ள நூறாயிரக்கணக்கான மக்களின் வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு அருகில் கேம்பி ஃப்ளெக்ரே(Campi Flegrei) என்ற எரிமலை சமீபகாலமாக சத்தமிட்டு வருகிறது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என புவியியலாளர்கள் அஞ்சுகின்றனர்.

எரிமலை வெடிப்பால் பெருளாதார பாதிப்பு ஏற்படுமா?

எரிமலை வெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

புவிசார் பொறியியல் மூலம் பெரும் பேரழிவுகளையும், அதன் விளைவுகளையும் குறைக்கலாம். சில எரிமலைகள் உலக அளவில் பொருளாதார ரீதியாகவும் காலநிலை ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்தும். உதாரணமாக, 2010இல் ஐஸ்லாந்தில் E15 எரிமலை வெடித்தபோது, ஐரோப்பா முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

அதேபோல, மலாக்கா ஜலசந்தி போன்ற இடங்களில் உள்ள எரிமலைகள் வெடித்தால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, உலகளாவிய வர்த்தகத்தை முடக்கலாம்.

அதேபோல, காலநிலையிலும் விளைவுகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மனிதர்கள் வெளியேற்றும் கரிம வாயுவுடன் எரிமலைகளில் இருந்து வெளியேறும் கரிம வாயு வளிமண்டலத்தில் சேர்ந்து, சூரியனைத் தடுத்து, குளிரச்சியான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டாக, 1816ஆம் ஆண்டில், தம்போரா மலை வெடித்ததால், அதன் துகள்கள் வளிமண்டலத்தில் படர்ந்ததன் விளைவாக, வடக்கு அரைக்கோளம் பகுதியில் கோடை இல்லாத ஓர் ஆண்டாக அந்த ஆண்டு இருந்தது.

உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய எரிமலைகளின் அளவைக் கருத்தில் கொண்டால், அவற்றால் ஏற்படும் உலகளாவிய தாக்கங்கள் இந்த எடுத்துக்காட்டுகளைவிட மிக மோசமாக இருக்கும்.

எரிமலை வெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் காசிடி மற்றும் இருத்தலியல் ஆபத்து குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர் லாரா மணி ஆகியோர் உலகம் முழுவதும் உள்ள எரிமலைகள் வெடித்தால், அவற்றால் ஏற்படும் மோசமான விளைவுகளை ஆராய்ந்தனர்.

உலகளவில் மூன்று டிகிரி வெப்பநிலை உயர்வு, விவசாயத்தில் பெரும் இழப்பு, நமது விநியோகச் சங்கிலியில் ஏற்படும் பாதிப்பு, வறட்சி அல்லது அதீத பருவமலை போன்ற தீவிர வானிலை மாற்றம் ஏற்பட்டு பூமியில் உள்ள அனைவரும் பாதிக்கப்படலாம் என அவர்கள் அஞ்சினார்.

அதனால்தான் காசிடி மற்றும் மணி – ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள தத்துவஞானி ஆண்டர்ஸ் சாண்ட்பெர்க் உடன் இணைந்து – எரிமலை புவி பொறியியலின் சாத்தியக்கூறுகள் மற்றும் நெறிமுறைகள் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

“நிச்சயமற்ற தன்மைகளும் அபாயங்களும் அதிகம் உள்ளது,” என்றார் காசிடி

“உதாரணமாக, எரிமலைக்குள் துளையிடுவதை எடுத்துக் கொள்ளுங்கள். கவனமாகத் துளையிடப்பட்ட பின், எரிமலையின் வாயு அழுத்தத்தைக் குறைக்கும். மேலும், எரிமலை வெடிப்பும் குறையும். ஐஸ்லாந்து, ஹவாய் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள ஏரிமலைகளின் மாக்மா பகுதியில் உள்ள புவியியலாளர்கள் துளையிட்டபோது, எதுவும் நடக்கவில்லை.

ஆனால், அனைத்து இடங்களிலும் இப்படி எந்த அபாயமும் இல்லாமல் அந்தப் பணி முடியும் எனக் கூற முடியாது. சில இடங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

இதையே அதிக ஆவியாகும் தன்மையுடன் இருக்கும் ஒரு துணை மண்டல எரிமலையில் செய்திருந்தால், அதன் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கலாம். நாங்கள் இதைப் பற்றி மிகக் குறைவான ஆராய்ச்சியே மேற்கொண்டுள்ளோம்,” என்கிறார் காசிடி.

காசிடி மற்றும் சகாக்கள் இரண்டு விஷயங்களை எழுப்புகின்றனர்: முதலாவதாக, மாக்மா பகுதியில் துளையிடுதல் போன்ற தடுப்பு முயற்சிகளின் சாத்தியக்கூறு, மற்றும் கந்தக உமிழ்வுகளின் வளிமண்டலத்தை சுத்தம் செய்வது போன்ற பிற நுட்பங்கள் குறித்து அதிக ஆராய்ச்சி இருக்க வேண்டும், இரண்டாவதாக, இத்தகைய தலையீடுகள் எழுப்பும் நெறிமுறை சிக்கல்களை நாம் ஆராய வேண்டும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *