
பிரதமர் மோடியும் தன்னுடைய X சமூக வலைதளப் பக்கத்தில், “சமூக நீதியின் தலைசிறந்த தலைவரான கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க இந்திய அரசு முடிவு செய்திருப்பதில் மகிழ்ச்சி. அவரின் நூற்றாண்டு விழாவையொட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது நாட்டு மக்களுக்குப் பெருமை சேர்க்கும். பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்கான கர்பூரி தாகூரின் அர்ப்பணிப்பு, தொலைநோக்குப் பார்வை ஆகியவை இந்தியாவின் சமூக அரசியலில் அழியாத முத்திரையைப் பதித்திருக்கிறது. இந்த பாரத ரத்னா அவரது ஒப்பற்ற பங்களிப்பிற்கான பணிவான அங்கீகாரம் மட்டுமல்லாமல், சமூகத்தில் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இருப்பினும், கர்பூரி தாகூர் இறந்து 35 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அவருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டிருப்பதற்குப் பின்னால் பா.ஜ.க-வின் அரசியல் ஆதாயத்துக்கான தேடல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம், பீகாரில் கடந்த ஆண்டு நிதிஷ் குமார் அரசு வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 37 சதவிகிதமும், பிற்படுத்தப்பட்டோர் 27 சதவிகிதமும் இருப்பது தெரியவந்திருக்கிறது. இதன்காரணமாக, பீகாரின் பிற்படுத்தப்பட்டோர் ஐகான் கர்பூரி தாகூருக்கு பா.ஜ.க அரசு பாரத ரத்னா அறிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
