இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இது ஒன்றிய அரசின் எதேச்சதிகாரம் கோலோச்சி உள்ளதையே காட்டுகிறது. இதற்காக பாஜக–வுடன் கூட்டணி வைத்துள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், முதல்வர் ரங்கசாமி அவர்களும் வெட்கப்பட வேண்டும்” என்று காரசாரமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதேபோல செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநில செயலாளர் அன்பழகன், “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க-வும் நாடகம் நடத்துகிறது. மத்தியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மாநில அந்தஸ்து கேட்டு புதுச்சேரியை ஆட்சி செய்த பல்வேறு அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தன. அப்போதெல்லாம் ஏன் மாநில அந்தஸ்தை வழங்கவில்லை. அதிலும் நாட்டின் பிரதமருடன் மிக மிக நெருக்கமாக, மத்திய இணை அமைச்சராக பதவியில் இருந்த நாராயணசாமி அப்போது நினைத்திருந்தால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கியிருக்க முடியும்.
அதேபோல் மத்தியிலும் மாநிலத்திலும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸும், தி.மு.க-வும் நினைத்திருந்தால் எப்போதோ மாநில அந்தஸ்து வழங்கியிருக்க முடியும். காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் மாநில அந்தஸ்து பிரச்னையை கையில் வைத்துக்கொண்டு கபட நாடகம் ஆடுகின்றனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டாம் சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் என கூறியவர்தான் நாராயணசாமி. அவர் நினைத்திருந்தால் மாநில அந்தஸ்து வாங்கி கொடுத்திருக்கலாம். ஆனால் புதுச்சேரி மக்களை ஏமாற்றிவிட்டோம் என தினந்தோறும் நினைத்து நினைத்து அவர் வெட்கித் தலைகுனிய வேண்டும். மத்திய பா.ஜ.க அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்காது என முதலமைச்சர் ரங்கசாமிக்கும் தெரியும். இப்போது சபாநாயகர் செல்வம் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசை அணுகுவோம் என்று கூறுகிறார். அப்படியானால் ஏற்கனவே போட்ட தீர்மானம் என்ன ஆனது ? சபாநாயர் செல்வம் இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார்” என்றார்.
மத்திய அரசின் இந்த பதில், மாநில அந்தஸ்தை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்த ரங்கசாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com