இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “நல்ல விஷயங்களை எதிர்ப்பது எதிர்க்கட்சிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. இது மிகப்பெரிய கண்டனத்துக்குரிய விஷயம். நாட்டில் இருக்கும் மாணவர்களின் கல்வி தகுதி, கடந்து வந்த பாதை, செய்த சாதனைகள், அவர்களின் விருப்பம் என அனைத்தையும் ஒரே தளத்தில் கொடுப்பது தான் இந்த அற்புதமான திட்டம். இன்றைய தொழிநுட்பத்தை பயன்படுத்தி மாணவர்கள் பயன் பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு செய்திருக்கும் ஒரு காரியத்தை, என்னவென்றே தெரிந்து கொள்ளாமல், அறிந்து கொள்ளாமல் எதிர்க்கிறார்கள்.

இந்த திட்டம் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி, அருமை பெருமைகளை பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. அப்போது பெற்றோர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றால் திரும்பப்பெற்றுக்கொள்ளப்படும். இது மாணவர்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது. உதாரணத்திற்கு ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என்றால், பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. ஆனால் இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு அதுபோன்ற பிரச்னைகள் இருக்காது. நவீன தொழிநுட்பத்தின் கீழ் எளிதாக செய்துகொள்ள முடியும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
