வங்கதேச தேர்தல்: அமெரிக்காவுக்கு எதிரணியில் சீனா, ரஷ்யாவுடன் இந்தியா சேர்வது ஏன்? என்ன நடக்கிறது?

வங்கதேச தேர்தல்: அமெரிக்காவுக்கு எதிரணியில் சீனா, ரஷ்யாவுடன் இந்தியா சேர்வது ஏன்? என்ன நடக்கிறது?

வங்கதேச தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசம் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், உலகின் அனைத்து வல்லரசு நாடுகளும் தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட முயல்கின்றன.

இந்த தேர்தல் ஆண்டு அரசியலுக்கு வெளியே நிச்சயமற்ற தன்மை மற்றும் பல ஏற்ற தாழ்வுகளால் குறிக்கப்படும்.

நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளான ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (பிஎன்பி) ஆகியவை தேர்தலைப் புறக்கணித்துள்ளன. இது அங்கு நிச்சயமற்ற தன்மையை அதிகரித்தது.

இடைக்கால அரசாங்கத்தின் மேற்பார்வையில் மட்டுமே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நாட்டில் 44 கட்சிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன. இதில் 26 கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன, மீதமுள்ள 14 கட்சிகள் புறக்கணித்துள்ளன.

ஷேக் ஹசீனா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

ஷேக் ஹசீனா

அரசியல் அணி திரட்டல்கள்

உள்ளூர் ஊடகங்களின்படி, கடந்த 11 மாதங்களில், வங்கதேசத்தில் அரசியல் வன்முறைகளால் 8,150 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலைமைக்கு எதிர்க்கட்சிகள் மீது அரசு குற்றம் சாட்டுகிறது.

வங்கதேசத்தில் ஜனவரி 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. பல எதிர்க்கட்சித் தலைவர்கள் அவாமி லீக் தலைமையிலான நிர்வாகத்தால் கைது செய்யப்பட்டனர். எதிர்க்கட்சிகளின் கூற்றுப்படி, அக்டோபர் மாதம் 21,385 பிஎன்பி ஊழியர்கள் பல வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அங்கு நிகழும் நிகழ்வுகள், இந்த அமைப்பில், உலக அரசியலில் குறிப்பிடத்தக்க அணிதிரட்டல்களைத் தூண்டின. பிஎன்பி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களைக் கோரியது, அமெரிக்கா அவர்களுக்கு ஆதரவளித்தது. தேர்தலை சீர்குலைக்கும் நபர்கள், தொடர்ந்து விசா கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அது முன்னறிவித்தது.

எவ்வாறாயினும், வங்கதேசத்தின் நட்பு நாடாக திகழும் இந்தியாவோ, சீனா மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது. வங்கதேசத்தின் தேர்தல்களில் வெளிப்புற தலையீடு ஏற்கத்தக்கது அல்ல என்பதை இந்தியா வலியுறுத்துகிறது.

அமெரிக்காவின் தலையீடு உறுதியற்ற தன்மையை வளர்க்கும் மற்றும் தீவிரமான கூறுகளை தோற்றுவிக்கும் என்றும், தெற்காசியா முழுவதும் சீனா தனது செல்வாக்கு மண்டலத்தை விரிவுபடுத்த அனுமதிக்கும் என்றும் இந்தியா அஞ்சுகிறது.

வங்கதேச தேர்தல்

பட மூலாதாரம், ANI

வங்கதேசம் மீது அமெரிக்காவின் அழுத்தம்

உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிராந்திய வல்லரசாக வளரும் இந்தியா ஆகியவை தனது உத்திகளைக் காக்கப் பார்க்கும் சூழலில் வங்கதேசத் தேர்தல் உலக அரசியலில் முக்கியப் புள்ளியாக மாறியுள்ளது. இதில் அமெரிக்கா மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

2014 தேர்தலுக்கு முன்பே ஷேக் ஹசீனாவை வங்கதேசத்தின் உயர் பதவியை அலங்கரிக்க சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஏற்பாடு செய்ததாக வதந்திகள் உள்ளன.

2023 மே மாதம் அமெரிக்கா ஒரு புதிய விசா கொள்கையை அறிவித்தது. வங்கதேசத்தில் ஜனநாயக தேர்தல் செயல்முறையை சீர்குலைக்கும் வங்கதேசத்தவர்களுக்கான விசாவை இடைநிறுத்துவது அதன் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டது.

வங்கதேசத்தில் சுதந்திரமான மற்றும் அமைதியான தேர்தலை நடத்துவதே இந்த திட்டத்தின் முதன்மையான இலக்கு என்று அது கூறியது.

“வங்கதேசத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள், அரசு சார்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நீதித்துறை உறுப்பினர்கள், சட்ட அமலாக்க முகவர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களும் இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளனர்” என்று அமெரிக்கா கூறியது.

விசா கட்டுப்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் அர்த்தமற்றவை என்றார்.

வங்கதேச அரசாங்கம் நாடு முழுவதும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை முறையாக அறிவித்துள்ளது.

சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்காவை குறிவைக்கின்றன

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ்

எவ்வாறாயினும், சீனாவும் ரஷ்யாவும் அமெரிக்காவின் நகர்வுகளை உடனடியாகக் கண்டித்தன.

வங்கதேச ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க சீனா உறுதுணையாக இருக்கும் என்று ஹசீனாவின் ஆகஸ்ட் கூட்ட அறிக்கையை சீன அதிபர் ஜி ஜின்பிங் நினைவுபடுத்தினார்.

சமீபத்தில், வங்கதேசத்துக்கான சீன தூதர் யு வென், ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நியாயமான தேர்தல்கள் பற்றி ஒரு நாடு பேசும்போது, மற்றொரு நாடு தன்னிச்சையாக விசாக்களை கட்டுப்படுத்துகிறது என்று அமெரிக்காவைக் குறிப்பிடாமல் விமர்சித்தார்.

அதே நாடு வங்கதேச மக்கள் மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது என்று யோ கூறினார்.

வங்கதேசத்தில் நடந்த தேர்தல்கள் தொடர்பாக சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான அதிகாரப் போட்டியை சுட்டிக்காட்டுகிறது.

வங்கதேசத்தில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்யும் நாடு அமெரிக்கா. தெற்காசிய நாடுகளில் ஆயத்த ஆடைகளுக்கான மிகப்பெரிய சந்தை வங்கதேசத்திலும் காணப்படுகிறது.

வங்கதேசத்தின் முதன்மை வர்த்தக பங்காளி மற்றும் பாதுகாப்பு தளவாட சப்ளையர் சீனா. இது இந்த இரண்டு உலக வல்லரசுகளுக்கும் இடையே ஆதிக்கத்திற்கான போரில் விளைந்தது.

வங்கதேசத்தில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்கும் வகையில் ஹசீனாவின் அரசாங்கத்தின் மீது அதிக அழுத்தம் கொடுக்க அமெரிக்கா விரும்புவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசத்துடனான உறவில் ரஷ்யாவும் முன்னேறி வருகிறது. முந்தைய ஐம்பது ஆண்டுகளில் இல்லாத வகையில், சமீபத்தில் வங்கதேசத்திற்கு ஒரு போர்க்கப்பலையும் ரஷ்யா அனுப்பியது. தேர்தலில் முறைகேடு செய்ய அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

டிசம்பர் 15 அன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, தேர்தல்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்றால், அமெரிக்காவின் தலையீடு அரபு வசந்தத்தைப் போன்று வங்கதேசத்தில் அமைதியின்மையைத் தூண்டும் என்று எச்சரித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் டாக்காவிற்கு தனது முதல் பயணத்தின் போது, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் அமெரிக்காவின் செயல்பாடுகளை கண்டித்தார். இந்தோ-பசிபிக் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவை தனிமைப்படுத்துவதே இதன் குறிக்கோள் என்று அவர் கூறினார்.

அமெரிக்காவுக்கு எதிரணியில் சீனா, ரஷ்யாவுடன் இந்தியா சேர்வது ஏன்?

இம்முறை வங்கதேசத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு எதிராக சீனா மற்றும் ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா நிற்கிறது.

பிஎன்பி கட்சி வெற்றி பெற்றால் அப்பகுதியில் இஸ்லாமிய மதவெறி பெருகும் என்று இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சியும் சந்தேகிக்கின்றது

வங்கதேசத்தில் இஸ்லாமிய போராளிகள் மீது ஆளும் அவாமி லீக் அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததால் இந்தியாவுடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன.

நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தக் கோரிய கிளர்ச்சியாளர்கள் மீது ஹசீனாவின் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது

இந்த அமைப்புகளுக்கு பிஎன்பி மற்றும் ஜமாத்-இ-இஸ்தாமி கட்சிகள் ஆதரவளிப்பதாகக் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், தேர்தலுக்கு முன்னர் பிஎன்பி ஆதரவாளர்கள் மீது ஹசீனா அரசாங்கம் அடுக்குமுறைகளை ஏவியது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது.

அதேநேரத்தில் இந்தியாவோ, இது வங்கதேசத்தின் தேர்தல் உள்விவகாரம் என்று கூறுகிறது. மேலும், வங்கதேசத்தில் தற்போதைய அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் அழுத்தம் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், அது தீவிரவாதக் குழுக்களை வலுப்படுத்தி, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக திகழ்கிறது என்றும் அமெரிக்காவை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

வங்கதேசத்தில் வெளியாகும் ஆங்கில நாளிதழான டாக்கா ட்ரிப்யூன் தனது ஆகஸ்ட் மாத கட்டுரையில், “அடிப்படைவாதத்தையும் தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கும் எந்தவொரு சக்தியும் வங்கதேசத்தில் ஆட்சிக்கு வருவதை இந்தியா ஒருபோதும் விரும்புவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *