பட மூலாதாரம், ANI
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (வியாழன், பிப்ரவரி 1) காலை 11:00 மணிக்கு நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.
முன்னர், பட்ஜெட் தாக்கல் செய்வதன் மரபின்படி, அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார்.
பின்னர், சிவப்புத் துணியால் ஆன பையில் காகிதமில்லா மின்னணு பட்ஜெட்டை எடுத்துக்கொண்டு அவர் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.
இடைக்கால பட்ஜெட் என்பது, தேர்தலுக்கு அடுத்து வரும் அரசு அடுத்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது வரையிலான காலத்திற்கான பட்ஜெட்.
பட மூலாதாரம், X/President of India
முன்னர், பட்ஜெட் தாக்கல் செய்வதன் மரபின்படி, நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார்.
இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்வதன்மூலம், முன்னர் ஐந்து முறை ஆண்டு பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிகர் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை (ஜனவரி 30) அன்று துவங்கியது. இரு அவைகளும் இணைந்த கூட்டத்தை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றித் துவங்கிவைத்தார். அதில், இந்தியா தொடர்ந்து இரண்டு காலாண்டுகளுக்கு 7.5% வளர்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், ANI
சிவப்புத் துணியால் ஆன பையில் காகிதமில்லா மின்னணு பட்ஜெட்டை எடுத்துக்கொண்டு அவர் நாடாளுமன்றம் வந்தடைந்தார்
விரைவில் இந்தியப் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால், இந்த இடைக்கால் பட்ஜெட் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப் படுகிறது)
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
