“அடுத்த எதிரியை எதிர்கொள்ள மித்ரன் தயார்” – வெளியானது ‘தனி ஒருவன்-2’ பட அறிவிப்பு!

சென்னை: ‘தனி ஒருவன்-2’ திரைப்படம் குறித்த அறிவிப்பை 2.54 நிமிட வீடியோ மூலம் அறிவித்துள்ளது படக்குழு. இந்த வீடியோ கதை அமைப்பு குறித்து விவரிக்கிறது. அதில் மித்ரன் அடுத்த எதிரியை எதிர்கொள்ள தயார் என …

நடிகர் வடிவேலு தம்பி ஜெகதீஸ்வரன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: “திரைக்கலைஞர் வடிவேலுவின் தம்பியான ஜெகதீஸ்வரன் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தார் என்று அறிந்து வருந்துகிறேன். தம்பியை இழந்து வாடும் வடிவேலுவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் …

இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் – லைகா தயாரிப்பு

சென்னை: லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜேசன் …

பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் கிராபிக்ஸுக்கு மட்டும் ரூ.200 கோடி?

ஹைதராபாத்: கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.200 கோடியை படக்குழு செலவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் …

அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட்

சென்னை: அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாத திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி மற்றும் காங்கிரஸ் முன்னாள் …

ஒரே சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் மட்டுமே! – மன்சூர் அலிகான் 

சென்னை: எம்ஜிஆர் மட்டுமே ஒரே சூப்பர்ஸ்டார் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இதனை இயக்கியுள்ளார். தான்யா ஹோப் நாயகியாக …

குழந்தைகளுடன் சைக்கிளிங்: கவனம் ஈர்க்கும் அஜித்தின் புதிய போட்டோ

சென்னை: நடிகர் அஜித்குமார் சென்னையில் குழந்தைகள் சிலருடன் சைக்கிளிங் செல்லும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அஜித் நடிப்பில் லைகா தயாரிக்கும் புதிய படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தை முதலில் விக்னேஷ் …

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு புஷ்போத்ஸவம்

சென்னை: மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாச பெருமாள், அலர்மேல் மங்கை தாயாருக்கு புஷ்போத்ஸவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சென்னை மயிலாப்பூர் கேசவ பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் …

‘விஜய் 68’ படத்தில் நவீன டெக்னாலஜி: அமெரிக்கா சென்றது படக்குழு

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்.19-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் …

மும்பையில் 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ‘ஜவான்’ டிக்கெட்கள்

மும்பை: ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்துக்கான டிக்கெட்கள் மும்பையில் 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததாகக் கூறப்படுகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் …