தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்: ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சரண் போட்டியின்றி தேர்வு

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு முறை தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது வழக்கம். தற்போதைய தலைவரான ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து, 2024-2026-ம் ஆண்டுக்கான …

2016 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் விரைவில் வழங்கப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசின் 2016-ம் ஆண்டு முதல் 2023 -ம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகள் விரைவில் வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் 2015-ம்ஆண்டுக்கான …

Past Lives: கடந்த கால நினைவுகளை கிளறும் கொரியன் ‘96’ | ஆஸ்கர் திரை அலசல்

ஆஸ்கர் 2024 விருதுகளில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த அசல் திரைக்கதை ஆகிய பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படம் ‘பாஸ்ட் லைவ்ஸ் (Past Lives). செலின் சாங் என்ற பெண் படைப்பாளி இயக்கியுள்ள இப்படம், …

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்கத்தில் தனுஷ்?

சென்னை: தனுஷ் நடிக்கவுள்ள 54-வது படத்தை ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. சிதம்பரம் எஸ்.பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் …

“சந்தீப் ரெட்டி வங்கா வெளிப்படையானவர்” – ‘அனிமல்’ இயக்குநர் குறித்து சிவகார்த்திகேயன்

சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா தனது படங்களைப் போலவே மிகவும் வெளிப்படையானவர் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், ‘அனிமல்’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா குறித்து பேசும்போது, …

ஏ.ஆர்.ரஹ்மான் மீதான விமர்சனமும், சந்தோஷ் நாராயணன் பதிலும்! @ ‘என்ஜாய் எஞ்சாமி’ சர்ச்சை

சென்னை: ‘என்ஜாய் என்சாமி’ பாடல் தொடர்பான சர்ச்சையில் ஏ.ஆர்.ரஹ்மான் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு யூடியூபில் வெளியான பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. …

பிரதமர் மோடியை சந்தித்தார் நடிகை வைஜெயந்திமாலா

சென்னை: பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழகத்துக்கு சமீபத்தில் வந்தபோது அவரை பழம்பெரும் நடிகையான வைஜெயந்திமாலா நேரில் சந்தித்தார். இது தொடர்பான படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் …

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகல்

சென்னை: கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்திலிருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னமும் கமல்ஹாசனும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, …

250 திரைகள்: ‘பாசிட்டிவ்’ விமர்சனங்களால் முன்னேறும் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’!

சென்னை: வெளியானபோது வெறும் தமிழகத்தில் 50 திரைகளில் மட்டுமே ஓடிக் கொண்டிருந்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ திரைப்படம் தற்போது 250-க்கும் மேற்பட்ட திரைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் …

“இந்துஸ்தானை விரும்பும் அனைவரும் இந்துக்களே” – ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ ட்ரெய்லர் எப்படி?

மும்பை: ரன்தீப் ஹூடா இயக்கி நடித்த ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’. ரன்தீப் ஹூடா இயக்கி நடித்துள்ள …