நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை நடிகை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார். எனினும் செப்டம்பர் 18ஆம் தேதியான இன்று சீமான் ஆஜராக வேண்டும் என காவல்துறை கூறிய நிலையில், சீமானும், அவரது மனைவியும் இன்று ஆஜரானார்கள். சீமானிடம் 2 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”2 பெண்களால் 13 ஆண்டுகளாக வழக்கு என்ற பெயரில் நான் தான் வன்கொடுமைக்கு ஆளானேன். விஜயலட்சுமிக்கு 8 முறை கருக்கலைப்பு செய்தேன் என்பது மிகப்பெரிய நகைச்சுவை. என் மீது களங்கம் ஏற்படுத்திய வீரலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அப்போது அவருடைய மனைவியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ”எனக்கு மனஉளைச்சல் எல்லாம் கிடையாது. எனக்கு பலர் போன் செய்து ஆறுதல் சொல்லும் போதெல்லாம் எதுக்கு சொல்றாங்கன்னுத்தான் தோன்றும். அவரே மலை போல் நிற்கும் போது எனக்கு என்ன கவலை? என்றார். அப்போது குறுக்கிட்ட சீமான், என் மனைவி இந்த விவகாரத்தில் கோபப்பட்டு என் குரல் வளையை நெரித்து, இவ்வளவு பெண்கள் உள்ள கொல்லையில் உனக்கு பழகுவதற்கு வேறு பொண்ணே கிடைக்கலையா? என கேட்டார்” என்று சீமான் தெரிவித்தார்.
நன்றி
Publisher: 1newsnation.com
