12 வயதில் கர்ப்பமானேன்: ஒரு சிறுமியின் கொடூரமான கதை

12 வயதில் கர்ப்பமானேன்: ஒரு சிறுமியின் கொடூரமான கதை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளிக் குறிப்பு,

“எனக்கு திருமணமான போது என் வயது 12” – உலகளவில் சிறுமிகளுக்கு நடக்கும் கொடுமை – காணொளி

“12 வயதில் கர்ப்பமானேன்” – ஒரு சிறுமியின் கொடூரமான கதை – காணொளி

உலகெங்கிலும் உள்ள ஐந்தில் ஒரு பெண் 18 வயதிற்குள் திருமணம் செய்துகொள்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டங்கள் உள்ள நாடுகளில் கூட சில சமயங்களில் அவற்றைச் செயல்படுத்தத் தவறிவிடுகிறார்கள். ஆனால் மலாவி நாட்டில் சிலர் மாற்றத்தின் முதல் அறிகுறிகளைக் காண்கிறார்கள்.

மூன்றாவது முறையாக நாங்கள் டமாராவை காண சென்றபோது, ​​​​அவள் அதிகாலையில் அருகிலுள்ள வயல்களுக்கு மண் அள்ளுவதற்காகப் புறப்பட்டாள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த 13 வயது சிறுமிக்கு ஓய்வு இல்லை.

டமாரா (அவரது உண்மையான பெயர் அல்ல) அவரது கணவர், 20 வயதுடைய ஆண் ஓடிப்போன பிறகு, பல மாதங்கள் தனது அத்தையின் சிறிய குடிசையின் தரையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

டமாராவை அவர்களின் சட்டவிரோத திருமணத்திலிருந்து மீட்க சமூக சேவைகள் வருவதாகக் கேள்விப்பட்ட அவர், அவர்கள் வருவதற்கு முன்பே புறப்பட்டு, அவளை அவளை விட்டு ஓடிவிட்டார்.

கடந்த சில வருடங்களில் டமாராவின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தெற்கு மலாவியின் நெனோ மாவட்டத்தில் கிராமப்புற விவசாய சமூகத்தில் இருந்த அவரது குடும்பம், அப்பகுதியில் உள்ள 65% மற்றவர்களைப் போலவே வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்தது. உக்ரைனில் நடக்கும் போரால் கோதுமை மற்றும் உர விநியோகம் மலாவி நாட்டிற்கு தடைபட்டுள்ளது. இது அந்த நாட்டை மேலும் வறுமைக்குள் தள்ளியுள்ளது.

பெண்குழந்தை விற்பனை

பட மூலாதாரம், YOUSEF ELDIN / BBC

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *