
பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுரேஷ் மேனன்
- பதவி, விளையாட்டு செய்தியாளர்
-
2023 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல முடியுமா?
ஆம், நிச்சயமாக, அவர்களால் முடியும்.
உலகின் சிறந்த அணியை இந்திய அணி கொண்டுள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு மற்றொரு சாதகம். ஆசியக் கோப்பையை வென்றது உட்பட சமீபமாக இந்திய அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. எனவே, அவர்கள் உலகக் கோப்பையை வெல்ல முடியும்.
அதேநேரம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய சில அணிகளுக்கும் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல அதே வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இதில், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகியவை இதுவரை ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது இல்லை.
இங்கிலாந்தில் 1983இல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்றதற்குப் பிறகு, ஒவ்வொரு உலகக்கோப்பைத் தொடரிலும் இந்திய அணி இடம் பிடித்தது. ஆனால், 1987இல் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரின்போது உள்ளூரில் விளையாடுவது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை மூத்த வீரர் ஒருவர் தனது தலையில் ஏற்றிக்கொண்டார்.
ஆடுகளத்தின் தன்மை தெரியும் என்பது சாதகமான விஷயமாக என்றாலும் ரசிகர்களின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளின் அழுத்தம் அந்த சாதகத்தைத் தோற்கடித்துவிடும்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 1987ஆம் ஆண்டில் இதுதான் நடந்தது. அரையிறுதியோடு இந்திய அணி உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியது.
ஆனால், 2011இல் இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடியபோது இது மீண்டும் நிகழவில்லை. எம்.எஸ்.தோனி சிக்ஸர் உடன் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது.
1983 -2011க்கு மத்தியில், இந்தியா 2003இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல் தோல்வியடைந்தது.
கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை சொந்த மண்ணில் வென்றது போல் தற்போதும் இந்தியா வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
ஆனால் உலகக்கோப்பைத் தொடர் விசித்திரமானது. அணிகள் ஆறு வாரங்களுக்கு மேலாக தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். 10 அணிகளில் ஒவ்வொன்றும் மீதமுள்ள 9 அணிகளுடன் விளையாடும் ரௌண்ட் ராபின் சுற்று வடிவில் போட்டிகள் நடைபெறுவதால் தொடக்கத்தில் ஏற்படும் தோல்விகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் 1992இல் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேற்றப்படும் தருவாயில் இருந்தபோது அது நடந்தது. இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, அடிபட்ட புலியைப் போல் மீண்டு வந்து ஆக்ரோஷமாக விளையாடி கோப்பையையும் கைப்பற்றியது.
ஒரு சில அணிகள் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடும், ஒரு சில அணிகள் 2003 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி செயல்பட்டது போல இறுதிப்போட்டி வரை சிறப்பாக விளையாடிவிட்டு அதன் பின்னர் மோசமாகச் செயல்படக்கூடும்.
பயிற்சியாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே, வீரர்களை உடற்தகுதியுடனும் சரியான நேரத்தில் வெளிப்படும் விதத்தில் வைத்திருப்பதும்தான். ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு அணுகுமுறை இருக்கும். சரியான நேரத்தில் அதை வெளிக்கொண்டு வருவதே முக்கியம்.
ஆசியக் கோப்பையில் இதேமுறையில் – பாகிஸ்தானுக்கு எதிராக 350 ரன்களுக்கு மேல் எடுத்த இந்தியா, இறுதிப் போட்டியில் இலங்கையை 50 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து, வென்றது எதிர்பார்ப்பை அதிகமாக்கி உள்ளது.
காயத்தில் இருந்து மீண்ட இரண்டு வீரர்கள் அணிக்குத் திரும்பியிருப்பது இந்தியாவுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம். தொடக்க விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவுக்கு வெற்றிகளைத் தேடிக் கொடுத்தவர் ஜஸ்பிரித் பும்ரா. பும்ராவின் இந்தத் திறன் அவரை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

பட மூலாதாரம், Getty Images
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்துக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் விளையாடுவதாக கூறப்பட்ட கே.எல்.ராகுல், சதம் அடித்து அசத்தினார்.
மற்ற இளம் வீரர்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் ஐசிசி பேட்ஸ்மென் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதேநேரத்தில் இஷான் கிஷன் உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறார்.
கடந்த 2011 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடிய விராட் கோலி ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அசத்தலான சதம் அடித்து நல்ல ஃபார்மில் உள்ளார்.
அதேநேரம், தொடக்க ஆட்டக்காரர்களில் பந்து வீசக் கூடியவராக ஒருவர் இல்லாதது போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குல்தீப் யாதவ் நேராக ஓடி வந்து வேகமாகப் பந்துவீசும் விதமாகத் தனது பந்துவீச்சை மெருகேற்றியுள்ளார். அதற்கான பலனும் அவருக்குக் கிடைக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பையை வென்ற பெரும்பாலான அணிகள் ஆறு அல்லது ஏழு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த முடிந்தது. (1996இல் இலங்கை ஒரு சிறந்த உதாரணம்). இதனால் ஒருவர் சிறப்பாகச் செயல்படவில்லை என்றாலும் காயம் அடைந்தாலும் அதைச் சமாளிக்க முடியும்.
இந்தியா வெற்றி பெற, பெரும்பாலான பேட்ஸ்மென்களும், ஐந்து பந்துவீச்சாளர்களும் சீராக இருக்க வேண்டும். எனவே அணித் தேர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். முக்கியமாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் போட்டியின் மூலம் தொடர்ந்து பந்து வீசுவதற்கான அவரது உடற்தகுதி பிரதான பங்கு வகிக்கும்.
மேற்கிந்தியத் தீவுகள் வலுவாக இருந்தபோதும் 1975ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற மூன்று உலகக்கோப்பைத் தொடரின்போது ஆஸ்திரேலியாவுக்கு சூழல் சாதகமாக இல்லை. ஆனாலும் இந்த நூற்றாண்டில் தொடர்ந்து மூன்று முறை அந்த அணி உலகக் கோப்பையை வென்றது.
கடந்த மூன்று முறையும் வெவ்வேறு நாடுகளே ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளன. அதுதான் உலகக்கோப்பையின் வசீகரம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்