பிரிட்டன் அரசர் சார்ல்ஸுக்கு புற்றுநோய் – BBC News தமிழ்

பிரிட்டன் அரசர் சார்ல்ஸுக்கு புற்றுநோய் - BBC News தமிழ்

சார்ல்ஸ்

பட மூலாதாரம், PA Media

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

புரோஸ்டேட் (முன்னிற்கும் சுரப்பி) வீக்க பிரச்னைக்காக அரசர் எடுத்துக் கொண்ட சிகிச்சையின்போது இந்தப் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இது புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல.

என்ன வகையான புற்றுநோய் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஆனால் அரண்மனையின் அறிக்கையின்படி அரசர் திங்களன்று “வழக்கமான சிகிச்சைகளை” தொடங்கினார்.

75 வயதான அரசர், அவரது பொது நிகழ்ச்சிகளில் இருந்து விலகியிருப்பார். அரசி கமீலா மற்றும் இளவரசர் வில்லியம் அவருக்கு உதவியாக இருப்பார்கள்.

புற்றுநோயின் நிலை அல்லது முன்னரே கணிக்கப்பட்டது பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் பகிரப்படவில்லை.

அரசர் ‘நேர்மறையாக இருக்கிறார்’

அரசர் “தனது சிகிச்சை குறித்து முற்றிலும் நேர்மறையாக உணர்வதாகவும் விரைவில் முழு பொதுப் பணிக்கு திரும்புவதை எதிர்பார்ப்பதாகவும்” பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

அரண்மனையின் அறிக்கை விவரம்

பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிக்கை

அரசர் தனது பொது நிகழ்வுகளை தற்காலிகமாக நிறுத்தினாலும், அரச தலைவராக தனது அரசியலமைப்பு பொறுப்பை தொடர்வார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை சாண்ட்ரிங்ஹாமில் ஒரு தேவாலய சேவையில் பங்கேற்றார், அங்கு அவர் கூட்டத்தை நோக்கி கையசைத்தார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் தனியார் மருத்துவமனையில் அவருக்கு புரோஸ்டேட் சிகிச்சை செய்யப்பட்டது.

புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல

ஆண்கள் தங்களது புரோஸ்டேட் சுரப்பியை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நோக்கத்துடன், தனது புரோஸ்டேட் சிகிச்சையைப் பற்றி அரசர் முன்னரே பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார்.

மக்களிடையே புரோஸ்டேட் பிரச்னைகள் அதிகரித்திருப்பது குறித்து பிரிட்டனின் NHS (தேசிய சுகாதார சேவை) இணையதளம் குறிப்பிட்ட நிலையில், இந்த பிரச்னை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவர் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

புரோஸ்டேட் தொடர்பாக அரசர் எடுத்துக் கொண்ட சமீபத்திய சிகிச்சையின் போது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அது புரோஸ்டேட் புற்றுநோய் அல்ல என புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

அவர் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பார், ஆனால் புற்றுநோய் தொடக்க நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

லண்டன் மருத்துவமனையில் இருந்து புறப்படும் அரசி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

மத்திய லண்டனில் அரசருடன் வந்த அரசி கமீலா

அரசப் பணிகளில் இருந்து விலகியிருப்பார்

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்து வந்தார்.

75 வயதான அரசர், அரச தலைவராக தனது அரசியலமைப்பு பொறுப்பை தொடர்வார்.

அரசர் தனது பொது செயல்பாடுகளில் தற்காலிகமாக விலகியிருப்பார். அரசி கமீலா, இளவரசர் சார்ல்ஸ் ஆகியோர் மன்னரின் பணிகளில் உதவியாக இருப்பார்கள்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காணொளிக் குறிப்பு,

புரோஸ்டேட் வீக்கத்துக்கான சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அரசர் மூன்றாம் சார்ல்ஸ்.

ஆண்கள் தங்களது புரோஸ்டேட் சுரப்பியை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நோக்கத்துடன், தனது புரோஸ்டேட் சிகிச்சையைப் பற்றி அரசர் முன்னரே பொதுவெளியில் தெரிவித்திருக்கிறார்.

மக்களிடையே புரோஸ்டேட் பிரச்னைகள் அதிகரித்திருப்பது குறித்து பிரிட்டனின் NHS (தேசிய சுகாதார சேவை) இணையதளம் குறிப்பிட்ட நிலையில், இந்த பிரச்னை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவர் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

அரசர் சார்ல்ஸ்

பட மூலாதாரம், PA Media

புற்றுநோய்க்கான சிகிச்சையில் கீமோதெரபி சிகிச்சையும், கதிர்வீச்சு சிகிச்சையும் அடங்கும். கீமோதெரபி என்பது புற்றுநோய் செல்களைக் கொல்லப் பயன்படும் மருந்துச் சிகிச்சையாகும்; கதிரியக்க சிகிச்சை என்பது புற்றுநோய் செல்களை அழிக்க கதிர்வீச்சு பயன்படுத்தப்படும் சிகிச்சை; இவையில்லாமல் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து தாக்கும் புற்றுநோய் மருந்துகளும் பயன்படுத்தப்படும்

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *