ஜி20 மாநாடு: நரேந்திர மோதி – ஜோ பைடன் சந்திப்பில் என்ன பேசப் போகிறார்கள்?

ஜி20 மாநாடு: நரேந்திர மோதி - ஜோ பைடன் சந்திப்பில் என்ன பேசப் போகிறார்கள்?

பிரதமர் மோதி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு,

டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியா தலைமையில் ஜ-20 மாநாடு நடக்கிறது.

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உலகின் 20 பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர்.

டெல்லியில் நாளை (செப்டம்பர் 9) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 10) இந்தியா தலைமையில் ஜி20 மாநாடு நடக்கிறது.

உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் இன்று (செப்டம்பர் 8) மாலை இந்தியா வந்தடைந்தார்.

இன்று இரவு ஜோ பைடன், பிரதமர் மோதியுடன் தனிப்பட்ட விருந்தில் பங்கெடுக்கிறார். அப்போது இரண்டு நாட்டின் தலைவர்களுக்கு இடையிலும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளன.

இதுகுறித்து எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோதி, “இன்று மாலை எனது இல்லத்தில் மூன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த உரையாடல் மூன்று நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பாகும்,” எனக் கூறியுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களும் என்ன பேசுவார்கள்?

பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே வழங்கப்படும் விசா குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்.

ஜி-20 உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோதி 15 இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தூய்மையான எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுடப்ம், பாதுகாப்பு போன்ற துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைடன் அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இந்தியா வருகிறார். இதற்கு முன்னதாக, 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் இந்தியாவிற்கு வந்திருந்தார்.

இன்று இந்தியா வந்துள்ள ஜோ பைடன், பிரதமர் மோதியை சந்திக்கிறார். பிறகு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை ஜி20 மாநாட்டில் பங்கேற்பார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை மதியம் வியட்நாம் செல்கிறார்.

இந்தியா- அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே வழங்கப்படும் விசா குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்.

கடந்த ஜுன் மாதம் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் மோதி, அடுத்த தலைமுறை மாடுலர் ரியாக்டரின் தாெழில்நுட்பம் குறித்துப் பேசினார். தற்போது, பைடனின் இந்தியா வருகையின்போது, இந்த விஷயம் குறித்தும் பேச வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த ஆண்டு ஜி20 மாநாட்டிற்கு தலைமை வகிக்கும் இந்திய பிரதமர் மோதி பதவியேற்றிருப்பதற்காக நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம். இந்தியாவில் நடக்கும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்றார்.

இந்தியா செல்வதற்கு முன் என்ன சொன்னார் பைடன்?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இரு நாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு முன்னதாக, MQ9B ட்ரோன்களை வாங்குமாறு இந்தியா முறைப்படி அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது.

அமெரிக்க அதிபர் பைடன் இன்று மாலை சுமார் ஏழு மணியளவில் இந்தியா வந்தடைந்தார்.

டெல்லிக்கு புறப்படுவதற்கு முன் அமெரிக்காவில் பேசிய பைடன், “நான் ஜி20இல் பங்கேற்கப் போகிறேன்,” என்றார். சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பிற்காக உருவாக்கப்பட்ட இந்த குழு, அமெரிக்க குடிமக்களின் நலன்களிலும் கவனம் செலுத்துகிறது. வளரும் நாடுகளுக்கும் உதவுகிறது.

ஊடக செய்திகளின்படி, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு முன்னதாக, MQ9B ட்ரோன்களை வாங்குமாறு இந்தியா முறைப்படி அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது.

இதுகுறித்த டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்திப்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் இரு நாடுகளிடையே இதுகுறித்து ஒப்பந்தம் ஏற்படலாம்.

அதேபோல, ‘ஹண்டர் கில்லர்’ எனப்படும் 31 விமான பாகங்களை வாங்கவும் பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா சில நாட்களுக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தது.

அடுத்த ஒன்று இல்லது இரண்டு மாதங்களில் இந்தியாவுக்கு அமெரிக்கா பதிலளிக்கலாம் என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட பைடன் – மோதி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோதி- ஜோ பைடன்

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு,

பைடன் ஒரு மைய-இடது ஜனநாயகவாதி. மோதி ஒரு பழமைவாத இந்து தேசியவாத தலைவர். இரு தலைவர்களுக்கும் இடையே சித்தாந்த ஒற்றுமை எதுவும் இல்லை.

இந்திய பிரதமர் மோதிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இடையில் இன்று நடைபெறும் இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க ஊடகங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.

‘வாஷிங்டன் போஸ்ட்’ எனது செய்தியில் 2021 முதல் பைடனும், மோதியும் கிட்டத்தட்ட 12 முறைக்கு மேல் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். இரு நாட்டினருக்கும் பொதுவான சில விஷயங்களின் மீது கவலைகள் உள்ளன. அதனால், அவர்களின் நெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வாஷிங்டன் போஸ்ட், “இரு தலைவர்களும் சீனாவால் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு, காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு மற்றும் உலகளாவிய விநியோக சங்கிலிகள் பற்றிப் பேச வாய்ப்புள்ளது,” என்று தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இந்த உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளை பிரதமர் மோதி மிகவும் பிரம்மாண்டமாகச் செய்துள்ளார். டெல்லியில் நெடுஞ்சாலை முதல் விமான நிலையம் வரை மோதியின் பெரிய படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பைடன் ஒரு மைய-இடது ஜனநாயகவாதி. மோதி ஒரு பழமைவாத இந்து தேசியவாத தலைவர். இரு தலைவர்களுக்கும் இடையே சித்தாந்த ஒற்றுமை எதுவும் இல்லை. ஆனால், இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், இரு தலைவர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் பைடனை மோதி சந்திப்பு விவாதப் பொருளாவதற்கு முன்பே, மற்றொரு சாத்தியமான சந்திப்பும் விவாதத்தில் இருந்து வருகிறது. அதுதான் பைடன்-ஜின்பிங் சந்திப்பு.

சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியாவில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக பைடன் கூறியிருந்தார். இருப்பினும், ஜின்பிங்கை விரைவில் சந்திப்பதாக பைடன் கூறியிருந்தார். ஆனால், இந்த சந்திப்பு எப்போது எங்கு நடைபெறும் என்பது குறித்து இதுவரையிலும் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *