பட மூலாதாரம், x
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இலங்கையில் அவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
ராமன் அப்துல்லா, தாமிரபரணி, புதிய கீதை உள்ளிட்ட படங்களில் அவர் பாடியுள்ளார்.
பவதாரிணி பாடிய முக்கியமான பாடல்கள்
பவதாரிணி பல முக்கியமான பாடல்களைப் பாடியுள்ளார். பிரபுதேவா நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் வரும் மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் அவர் பாடகியாக அறிமுகமானார்.
எம்.குமரன் படத்தில் வரும் அய்யோ அய்யோ பாடல், தாமிரபரணி படத்தின் தாளியே தேவையில்ல பாடல் போன்ற ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் பவதாரிணி.
அதேபோல், காதலுக்கு மரியாதை படத்தில் வரும் என்னைத் தாலாட்ட வருவாளா, ஆயுத எழுத்து படத்தின் யாக்கைத் திரி, காக்க காக்க படத்தின் என்னைக் கொஞ்சம் மாற்றி போன்ற தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பாடல்களை அவர் பாடியுள்ளார்.
(இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
