ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
83 வயது வெங்கடேசன், மூத்தோருக்கான தடகள போட்டிகளில் இந்தியா சார்பாக போட்டியிடுகிறார்.
கஞ்சியும் முட்டையும் சாப்பிட்டு தடகள போட்டியில் தங்கம் வெல்லும் 83 வயது ‘இளைஞர்’
கன்னியாகுமரியை சேர்ந்த 83 வயது வெங்கடேசன், மூத்தோருக்கான தடகள போட்டிகளில் இந்தியா சார்பாக போட்டியிட்டு தங்கப் பதக்கங்களை வென்று வருகிறார்.
38 ஆண்டுகள் ரயில்வே துறையில் பணியாற்றி 2001ம் ஆண்டு ஓய்வுபெற்ற பிறகு தான் ஓட வேண்டும் என்ற ஆசை தொற்றிக் கொண்டது. அதன் பிறகு போட்டிகளில் ஓட ஆரம்பித்த அவர், மாநில அளவில் 23 தங்க பதக்கங்களையும் தேசிய அளவில் 32 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
மலேசியா, இலங்கை உட்பட வெளிநாடுகளுக்கு சென்று சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். அவர் போட்டிக்கு 20 நாட்கள் முன்பே பயிற்சி செய்ய தொடங்குவதாகவும், அது வீட்டுக்கு அருகிலேயே சாலைகளில் செய்வதாகவும் கூறுகிறார்.
தனியாக இதற்கென பிரத்யேக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாத வெங்கடேசன், இரவில் கஞ்சி சாப்பிட்டு தூங்கிவிடுவதாக கூறுகிறார். அவரது உத்வேகம் இளைஞர்களுக்கு பெரும் முன்னுதாரணமாக உள்ளது. அவரைப் பற்றிய முழு விவரம் காணொளியில்.
தயாரிப்பு: மகேஷ்
படத் தொகுப்பு: ஜனார்த்தனன்

நன்றி
Publisher: பிபிசிதமிழ்