இஸ்ரேல் – பாலத்தீனம்: சமூக ஊடகங்களில் இவர்கள் பொய்யை விதைத்து பணத்தை அறுவடை செய்வது எப்படி?

இஸ்ரேல் - பாலத்தீனம்: சமூக ஊடகங்களில் இவர்கள் பொய்யை விதைத்து பணத்தை அறுவடை செய்வது எப்படி?

போரிலிருந்து வருமானம்

பட மூலாதாரம், EPA

சில சமூக ஊடக பிரபலங்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து தவறான, ஒரு தலைபட்சமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

X சமூக ஊடக தளத்தில், ஆங்கிலத்தில் அவர்கள் பதிவிட்டது தான் அக்டோபர் மாதத்தில் அதிகமாக பார்க்கப்பட்ட, பகிரப்பட்ட கருத்துகள் ஆகும்.

அந்த துறை சம்பந்தமாக நிபுணத்துவம் இல்லாமலே, அவர்களை பல மில்லியன் நபர்கள் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். ஹமாஸ் அட்டூழியங்களை தவறு என பகிரங்கமாக கூறி, சித்தரிக்கப்பட்ட தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு படங்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் கருத்துகளை பகிர்கின்றனர்.

பொய்யான, வெறுப்பூட்டும் பதிவுகள் இட்டு, தங்களுக்கு கட்டணம் செலுத்தும் சந்தாதாரர்களை பெற்றுள்ளனர் என்று பொய் கருத்துகள் கண்டறியும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், X தளத்தின் வருமான பகிர்வு திட்டம் மூலமாகவும் அவர்கள் லாபம் சம்பாதிக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

காலநிலை மாற்றம் முதல் இஸ்ரேல் எதிர்ப்பு போர் வரை

ஹிங்கில், 24, தான் ஒரு எம் ஏ ஜி ஏ (மேக் அமெரிக்கா கிரேட் அகைன்) கம்யூனிஸ்ட் எனக்கூறிக் கொள்கிறார். அவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினின் தீவிர ஆதரவாளர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் தொடர்புப்படுத்தி எம் ஏ ஜி ஏ இயக்கம் தொடங்கப்பட்டது.

ஹிங்கிலை பின் தொடர்பவர்கள் இஸ்ரேல்-காஸா மோதல் காரணமாக அதிகரித்துள்ளது. தற்போது அவரை 20 லட்சம் பேர் தொடர்கின்றனர். போரைப் பற்றி பதிவிடும் அனைத்து கணக்குகளிலும் அவருடைய கணக்கு அதிக பார்வைகள், மறுபதிவுகள், லைக்குகள் மற்றும் பதில்களைப் பெற்றுள்ளது.

இந்த விரைவான வளர்ச்சி அவர்கள் பதிவிடும் ட்வீட்களின் வகை மற்றும் எண்ணிக்கையால் ஏற்படுகிறது. அவருடைய பதிவுகளில் பொய்யான அல்லது தவறான தகவல்கள் மற்றும் காயமடைந்த குழந்தைகள் மற்றும் அழிக்கப்பட்ட வீடுகளைக் காட்டும் கிராஃபிக் வீடியோக்கள் உள்ளன. இதுபோன்ற பதிவுகள் கவலை அளிப்பவை என்றாலும், அவை பெருமளவில் பின் தொடர்பவர்களை ஈர்க்கின்றன. அவை மிகப்பெரிய அளவில் பகிரப்படுகின்றன.

தவறான தகவல்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனமான லாஜிக்கலியின் பகுப்பாய்வு, ஹிங்கிலின் பதிவு 20 மில்லியனுக்கும் அதிகமான முறை X தளத்தில் பகிரப்பட்டது என்பதைக் காட்டியது.

இஸ்ரேல்-காஸா போரில் X இல் அதிகம் பகிரப்பட்ட 20 பதிவுகளில் 15 ஹிங்கிலால் எழுதப்பட்டவை.

இவ்வளவு பின் தொடர்பவர்களை கொண்ட ஹிங்கில், இந்தத் துறையில் நிபுணர் அல்ல. ஹமாஸ் தாக்குதலுக்கு முன், அவர் இஸ்ரேல்-பாலத்தீன மோதலைப் பற்றி அரிதாக பதிவிட்டுள்ளார்.

அவர் முன்னதாக சுற்றுச்சூழல் மற்றும் ரஷ்ய ஆதரவு கருத்துகளுக்காக அதிகம் அறியப்பட்டார்.

இளம் வயதில் அவர் சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்தார். கிரகத்தை காப்பாற்ற பாடுபடும் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பட்டியலில் ஹிங்கில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

தன்னை எம் ஏ ஜி ஏ கம்யூனிஸ்ட் என்று பிரதிநிதித்துவப்படுத்தி ஹிங்கில் ஆன்லைனில் பிரபலமானார். யுக்ரைன் நாஜிகளால் ஆளப்படுகிறது மற்றும் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஒரு போதைப்பொருள் அடிமை என்பது போன்ற பொய்யான கூற்றுகளை அவர் மீண்டும் மீண்டும் பரப்பினார்.

அவர் மரபணுவியலை ஒரு போலி அறிவியல் என்று அழைத்தார். இதற்கு மேல், ஸ்டாலின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார் மற்றும் சிரியாவில் அசாத் ஆட்சியை ஆதரித்தார்.

போரிலிருந்து வருமானம்

பட மூலாதாரம், X

ஹமாஸ் தாக்குதலுக்கு பின் அதிகரித்த நடவடிக்கைகள்

அக்டோபர் 7ம் தேதி, ஹமாஸ் இஸ்ரேலை தாக்கிய போது, ஹிங்கில் ஒவ்வொரு நாளும் இஸ்ரேலை எதிர்த்து பல பதிவுகள் போடுவார். இந்த பதிவுகளில் அவர், பிரிட்டன் அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஐ எஸ் மற்றும் அல்-குவைதா அமைப்புகளுடன் இஸ்ரேலை ஒப்பிட்டுள்ளார்.

அவர் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கூற்றுகளை தெரிவித்து வந்தார். இவை பிபிசியால் ஆய்வு செய்யப்பட்டன. அவை தவறானவை, மக்களை திசை திருப்பக்கூடியவை என்பது தெரிய வந்தது. காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் ஒரு பழைய வீடியோவை வெளியிட்டு, அது தற்போது சிரியாவின் நிலைமை என்று பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பதிவில், இஸ்ரேலிய செய்தித்தாள் ‘ஹாரெட்ஸ்’-ல் ஹமாஸால் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 900 தான் என்றும், அதிகாரபூர்வ தகவல்கள் படி 1200 க்கும் மேல் இல்லை என செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் ‘ஹாரெட்ஸ்’ அப்படி ஒரு செய்தியை வெளியிடவே இல்லை. ஹிங்கிலின் கூற்று அப்பட்டமான பொய் என்று அந்த செய்தித் தாள் அறிக்கை வெளியிட்டது. அந்த பதிவு இப்போதும் இருக்கிறது. 50 லட்சத்துக்கும் மேலான முறைகள் அந்த பதிவு பார்க்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் தாக்குதலை நடத்தவில்லை என்று ஹிங்கில் மறுக்கிறார். சூப்பர்நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இஸ்ரேலிய காவல்துறையுடனான மோதலில் உயிரிழந்ததாக தவறாக கூறியிருந்தார்.

X சமூக தளத்தில் இன்னமும் அவரது பதிவு உள்ளது. அதில் அவர், அக்டோபர் 7ம் தேதி தாக்குதல்களுக்கு ஹமாஸ் காரணம் கிடையாது என்று கூறுகிறார். ஆனால் இது தவறு. ஹமாஸ் போராளிகள், ஆயுதமற்ற மக்களை கொல்லும் காட்சிகள், பிபிசியால் உண்மை என உறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.

பிபிசியுடனான நேர்காணலில் ஹிங்கில், தான் உண்மையை கூறுவதாக வாதிட்டார். மோதலுக்கு முன்பு, X சமூக தளத்தில் இந்த விவகாரங்கள் குறித்து அரிதாகவே பேசியிருந்தாலும், மற்ற சமூக ஊடக தளங்கில் இவை குறித்து மோதலுக்கு முன்பு இருந்தே பேசி வந்ததாகவும் அவர் கூறினார்.

அவர் இதனால் எந்த ஆதாயமும் தேடவில்லை என்றார். இவ்வளவு முக்கியமான விசயங்களில், பொய்களை சொல்வதை விட உண்மையை சொல்லி வாழ்வதே சிறந்தது என்றார்.

அவருக்கு இந்த விவகாரங்களில் என்ன நிபுணத்துவம் இருக்கிறது என கேட்டதற்கு, ஊடகங்களும், நிபுணர்களும் கூட உண்மையிலேயே நிபுணர்கள் அல்ல என்றார்.

போரிலிருந்து வருமானம்

பட மூலாதாரம், X

புதிய வர்க்கம்

இது போன்ற தந்திரங்களை பயன்படுத்தும் சமூக ஊடக பிரபலம் ஹிங்கில் மட்டுமே கிடையாது.

மரியோ நவாஃபல் துபாயில் கிரிப்டோ கரன்சி தொழில் செய்து வருகிறார். மருத்துவம் சார்ந்த தொழில்களும், சமையலறை இயந்திரங்களையும் விற்கும் தொழிலையும் அவர் ஏற்கெனவே செய்து வந்துள்ளார்.

இந்த விவகாரங்கள் குறித்து அவருக்கு எந்த நிபுணத்துவமும் இல்லை என்றாலும், பல தருணங்களில் அவரை எலோன் மஸ்க் ஆதரித்துள்ளார். யூத விவகாரங்கள் குறித்த அவரின் கருத்துகளுக்கும் ஆதரவு அளித்தார்.

இஸ்ரேல்-காஸா மோதலில் நவாஃபல் ஒரு பக்கத்தினருக்கு ஆதரவு அளிப்பது போல் தெரியவில்லை. ஆனால், 24 மணி நேரமும், “பிரேக்கிங்”, “சற்று முன்”, “தற்போது” என்று தகவல்களை பகிர்ந்து வருகிறார். அவரை 11 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

ஆனால் அவரது பதிவுகளில் ஆதாரங்கள் இல்லை. பல நேரங்களில் தவறான கருத்துகள் வெளியிடப்படுகின்றன. சிரியாவில் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலை காஸாவில் நடைபெற்றது என்று கூறியிருந்தார். இந்த பதிவு பிறகு நீக்கப்பட்டது.

மற்றொரு பதிவில், ஹமாஸ் ஒரு இஸ்ரேல் ராணுவ தளபதியை கடத்தி சென்றதாக போடப்பட்ட பொய்யான வீடியோ, இன்னும் நீக்கப்படாமல் இருக்கிறது. இந்த பதிவு 18 மில்லியன் முறைகள் பார்க்கப்பட்டுள்ளன.

நவாஃபலிடம் இது குறித்து அவரின் கருத்தை பெறுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

வலது சாரி அமெரிக்க சமூக ஊடக பிரபலங்கள், இந்த மோதல் குறித்த எந்த தொடர்பும் இல்லாதவர்கள்- காலின் ரக், டாம் லுக்ரே- ஆகியோரையும் இஸ்ரேல்- காஸா மோதல் குறித்து தகவல்கள் பதிவிட்ட பிறகு, ஆயிரக்கணக்கானோர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

போரிலிருந்து வருமானம்

பட மூலாதாரம், X

பொய்யான பதிவுகள்

ஹெஸ்புலா போராளிகள் பாராகிளைடர்கள் கொண்டு இஸ்ரேலுக்குள் நுழைகிறார்கள் என்ற தவறான தகவலை ரக் பதிவிட்டிருந்தார்.

காஸாவின் பழைய வீடியோக்களை பதிவிட்டு, சிரியாவில் நடப்பது போல் டாம் லுக்ரே பதிவிட்டிருந்தார். அதே போன்று போலந்தில் நடைபெற்ற கத்தோலிக்க திருச்சபை நிகழ்வுகளை இஸ்ரேலுக்கு ஆதரவான பேரணி என்று தவறாக பதிவிட்டிருந்தார்.

ரக் பிபிசியின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.

இந்த மோதலை வைத்து தங்கள் சமூக ஊடக இருப்பைப் பெருக்கிக் கொள்ள சில பெயர் தெரியாதவர்களும் இறங்கியுள்ளனர். யாருடைய கணக்கு என்று கண்டுபிடிக்க முடியாதபடி உள்ளவர்கள் சிலர் உடனுக்குடன், உணர்ச்சி மிக்க தகவல்கள், வீடியோக்களை பகிர்ந்து அதிக பிந்தொடர்பவர்களை பெற்று வருகின்றனர்.

இது போன்ற இரண்டு கணக்குகளை போரை குறித்து தகவல்களை அறிய பின் தொடரலாம் என எலோன் மஸ்க் பரிந்துரைத்திருந்தார். அவை OSINTdefender மற்றும் WarMonitor. அக்டோபர் 7ம் தேதி முதல் பல மில்லியன் பேர் இவர்களை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

சமூக ஊடக பிரபலங்கள் போலவே, இந்த கணக்குகளிலிருந்து இதற்கு முன்பு உறுதி செய்யப்படாத, தவறான கூற்றுகள் பதிவிடப்பட்டுள்ளன. பெண்டகன் அருகே குண்டு வெடிப்பு நடப்பது போல வீடியோ வெளியிடப்பட்டது. அதை ஆய்வு செய்த போது ,அது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டது.

மேலும், யூத எதிர்ப்பு கருத்துகளை இதற்கு முன்பு கூறியிருக்கிறார் என்பதும் தெரிந்தது. அவரை பின் தொடர பரிந்துரைத்த பதிவை மஸ்க் நீக்கிவிட்டார்.

வாஷிங்டன் பல்கலைகழக அறிக்கை ஒன்றின் படி, சமூக ஊடக பிரபலங்கள், முகம் தெரியாத நபர்கள் ஆகியோரின் கணக்குகளே ஆங்கிலத்தில் இஸ்ரேல்-காஸா போர் குறித்த அறிந்துக் கொள்ள தேடப்படும் முதல் ஆதாரங்களாகும். இந்த சமூக ஊடக தளத்தின் புதிய மேல் தட்டு வர்க்கம் என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

பொய்யை விதைத்து பணத்தை அறுவடை செய்யும் சமூக வலைதள பிரபலங்கள்

போரிலிருந்து வருமானம்

பட மூலாதாரம், Getty Images

X சமூக ஊடக தளத்தில் வைரலாக பரவும் பொய்யான, மக்களை திசை திருப்பும் பதிவுகளை பிபிசி வெரிஃபைட்-ன் ஷயான் சர்தரிசதே கண்காணித்து வருகிறார்.

“சமூக ஊடகம் எப்படி இயங்கும் என்றால், அதிர்ச்சியான, தாக்குகிற வகையில் கருத்துகளை தொடர்ந்து சீராக பகிரப்படும் போது, அவற்றுக்கு சன்மானம் வழங்கும். ஒரு போர் இதற்கான வளமான சூழலை வழங்குகிறது” என்று அவர் கூறுகிறார்.

Xப்ரீமியம், Xப்ரீமியம் பிளஸ் ஆகியவற்றை மஸ்க் ஆரம்பித்துள்ளார் . இதை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டணம் செலுத்தி கணக்கு வைத்திருப்பவர்களின் பதில்கள் அதிகமானோரை சென்றடையும் அல்லது அவர்களின் பதில்கள் முதலில் காண்பிக்கப்படும். X-ன் வருமான பகிர்வு திட்டத்தை பயன்படுத்தியும் பயனாளர்கள் பணம் ஈட்டலாம்.

Xதளத்தில் செலுத்த வேண்டிய கட்டணம் சீராக இல்லை . ஹிங்கில் ஒரு மாதத்துக்கு மூன்று டாலர் கட்டணம் வசூலிக்கிறார். மற்ற பிரபல கணக்குகளை பின் தொடர ஒன்று முதல் ஐந்து டாலர்கள் செலுத்த வேண்டியிருக்கும். X தளத்தில் எத்தனை பேர் கட்டணம் செலுத்தி இயங்குகின்றனர் என்பது தெரியவில்லை.

ஜூலை மாதத்தில் யூத எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டிருந்த WarmMonitor என்ற கணக்குக்கு X தனது இடபகிர்வு திட்டத்தின் கீழ் 16,191 டாலர்கள் வழங்கியுள்ளது.

X தளத்தை தொடர்பு கொண்ட போது அவர்கள் பதிலளிக்கவில்லை.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *