
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முன் நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் உடன் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் சமூக ஊடகங்கள் பற்றிய முக்கிய உத்தரவை வெளியிட்டு இருந்தார்.
மேலும், அவர் தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை பற்றி ஆய்வு செய்ய முடிவு செய்து உள்ளதாகவும், அதற்காக ஆண்டுக்கு ஒரு முறை அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை மாநாடு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அக்டோபர் 3 ஆம் தேதி நடைப்பெற்ற மாநாட்டில் முதல்வர் அவர்கள் பல்வேறு முக்கிய உத்தரவுகளை வெளியிட்டு உள்ளார்.
ALSO READ > கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் புதிய மாற்றம்!
அந்த உத்தரவின் பேரில் கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் அதிகமாக குற்ற சம்பவங்கள் நடந்து உள்ளதாக ஒரு சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்த்தால் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது என்று கூறினார். அதோடு இது போன்ற போலியான செய்திகளை சில ஊடகங்கள் பரப்புவதன் மூலமாக மக்களுக்கு இடையில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த தப்பான கருத்து ஏற்பட கூடும் என்று கூறி உள்ளார். எனவே, அதிகாரிகள் உடனடியாக இது குறித்து ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நன்றி
Publisher: jobstamil.in