அதைத்தொடர்ந்து பல வருடங்களுக்குப் பிறகு, 1985-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கு வங்கத்துக்கு வந்தபோது, உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் ராஜீவ் காந்தியைச் சந்திக்கும் வாய்ப்பை புத்னி மஞ்சியாயினுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். பிரதமரைச் சந்தித்த புத்னி மஞ்சியாயின் தனக்கு நேர்ந்தவற்றை கூறிய பிறகு, தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனில் அவருக்கு வேலை வழங்கப்பட்டது.

சுமார் 20 வருடங்கள் அதில் வேலைபார்த்த புத்னி மஞ்சியாயின் கடந்த 2005-ல் பணியிலிருந்து ஒய்வுபெற்றார். இந்த நிலையில், ஜார்கண்டின் பஞ்சேட்டில் தன்னுடைய மகள் ரத்னாவுடன் வசித்துவந்த புத்னி மஞ்சியாயின், கடந்த நவம்பர் 17-ம் தேதியன்று காலமானார். அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உட்பட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தற்போது, பஞ்சேட் பஞ்சாயத்தின் தலைவர் பைரவ் மண்டல் உட்பட பலரும், புத்னி மஞ்சியாயினுக்கு நினைவிடம் அமைக்குமாறும், அவரின் 60 வயது மகள் ரத்னாவுக்கு வீடு கட்டித்தருமாறும் தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.

புத்னி மஞ்சியாயின், தான் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் ஊடகத்திடம் பேசுகையில், “அன்று நேரு வந்தார், மாலை அணிவித்து வரவேற்றேன், நேரு சென்றுவிட்டார். அதன் பின்னர், `நேருவின் பழங்குடியின மனைவி’ என்று நான் அழைக்கப்பட்டேன். பிறகு, என் சொந்த வாழ்க்கைக்காக நான் ஓட வேண்டியிருந்தது” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
