இவை தவிர எல்லீஸ் ரோட்டிலும் பாதாள சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம் உள்ளது. குறிப்பாக, தேவி தியேட்டர் பின்புறமுள்ள எல்லீஸ் ரோடு அண்ணாசாமி தெருவில் ஒரு பாதாள சாக்கடை மூடியிலிருந்து கழிவுநீர் வழிந்தபடி, அந்த சாலையையே சாக்கடை குளமாக மாற்றியிருக்கிறது. அதேபோல, எல்லீஸ் தோட்டிலிருந்து வாலாஜா சாலைக்குத் திரும்பும் வளைவில் பாதாள சாக்கடையில் மூடியே இல்லாமல் ஆபத்தான முறையில் திறந்துகிடக்கிறது. அதில் பெயரளவுக்கு காவல்துறை பேரிகார்டைக் கொண்டு முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. இவைதவிர தொகுதியின் பல்வேறு சாலைகளின் நடுவே உள்ள பாதாள சாக்கடை மூடிகளின் நிலை பெரும்பாலும் சிதிலமடைந்த நிலையில், புதிய மூடிகள் மாற்றப்படாமல் இருக்கின்றன.

தலைநகரில், ஒரு அமைச்சரின் தொகுதியிலேயே கழிவுநீர் கால்வாய்கள் சரிவர பராமரிக்கப்படாமல், பாதாள சாக்கடையின் மூடிகள் உடைந்தும், அதில் பலவற்றில் கழிவுநீர் வெளியேறிக்கொண்டிருப்பதை பார்க்கும்போது நமக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. நடவடிக்கை எடுக்குமா அமைச்சர் உள்ளிட்ட அரசு நிர்வாகம்?.
நன்றி
Publisher: www.vikatan.com
