இன்றைய முக்கிய செய்திகள்
இன்று (23-10-2023) தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Mon, 23 Oct 202302:03 AM IST
Chennai : சூதாட்டம் விளையாடிய 9 பேர் கைது!
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தடை செய்யப்பட்ட சூதாட்டம் விளையாடிய 9 பேர் கைது. அவர்களிடமிருந்து சுவைபிங் மெஷின் மற்றும் ரூ.37,960 ரொக்கம் பறிமுதல். சூதாட்டம் நடப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையின்போது பிடிபட்டனர்.
Mon, 23 Oct 202301:54 AM IST
Weather Update : 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை!
ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
Mon, 23 Oct 202301:48 AM IST
Gujarat : கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் மரணம்!
நவராத்திரி விழாவின் போது பெண்ணின் தெய்வீக வடிவமான துர்கா தேவியை மையமாக வைத்து, 9 சக்தி வடிவ தெய்வங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள கர்பா பாடல்கள் இசைக்கப்படும். கர்பா நடனத்தைப் பாரம்பரிய உடைகளுடன் ஆண்களும், பெண்களும் விடியும் வரை இசைக்கு ஏற்ப ஆடுவார்கள். இந்நிலையில், குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 10 பேரும் இள வயது மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Mon, 23 Oct 202301:40 AM IST
Lake Level : முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2530 மில்லியன் கன அடியாக உள்ளது. 159 கன அடி நீர் வெளியேற்றம். 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 547 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 454 மில்லியன் கன அடியாக உள்ளது!
Mon, 23 Oct 202301:29 AM IST
Ayudha Pooja 2023 : ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்!
தமிழ்நாடு முழுவதும் ஆயுத பூஜை விழா உற்சாகக் கொண்டாட்டம். அவல், பொரி, பழங்களுடன் சாமிக்கு படையலிட்டு, தொழில் வளம் பெருக வேண்டுதல்.
Mon, 23 Oct 202301:28 AM IST
Weather Update : மழை நிலவரம்!
இன்று முதல் 24ஆம் தேதி வரை தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mon, 23 Oct 202301:27 AM IST
Petrol Diesel price : பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று (அக்.23) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com