Tamil Latest News Updates : சென்னையில் மிதமான மழை

Tamil Latest News Updates : சென்னையில் மிதமான மழை

இன்றைய முக்கிய செய்திகள்

இன்று (21-10-2023) தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Sat, 21 Oct 202301:21 AM IST

உலக கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Sat, 21 Oct 202301:17 AM IST

இன்று தொடங்கும் ககன்யான் சோதனை ஓட்டம்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட முக்கிய சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது. விண்கலத்தை விண்ணுக்கு செலுத்தி மீண்டும் பூமியில் தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Sat, 21 Oct 202301:09 AM IST

 சென்னையில் மிதமான மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கிண்டி, வேளச்சேரி, வடபழனி, நுங்கம்பாக்கம்,  பகுதிகளில் மிதமான  மழை பெய்து வருகிறது.

Sat, 21 Oct 202301:04 AM IST

பெட்ரோல் விலை நிலவரம்!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் 518 ஆவது நாளாக அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னையில் இன்று (அக்.21) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *