இன்றைய முக்கிய செய்திகள்
இன்று (20-10-2023) தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Fri, 20 Oct 202302:26 AM IST
Rahul Gandhi : தெலங்கானாவில் இன்று ராகுல் காந்தி பரப்புரை
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றங்களின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதன்படி நவம்பர் 7-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30-ஆம் தேதி வரை அடுத்தடுத்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தெலங்கானாவில் இன்று ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்கிறார்.
Fri, 20 Oct 202302:15 AM IST
Annamalai : அண்ணாமலை யாத்திரை ரத்து!
திருப்பூர் மாநகரில் அண்ணாமலை யாத்திரை நடைபெற இருந்த நிலையில் பங்காரு அடிகளார் மறைவையொட்டி அண்ணாமலை யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Fri, 20 Oct 202301:48 AM IST
Weather Update : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு
தென்கிழக்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இது மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Fri, 20 Oct 202301:49 AM IST
senthil balaji : அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைகிறது. முன்னதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.
Fri, 20 Oct 202301:52 AM IST
Cell broadcast alert : “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை
பேரிடர் காலத்தில் அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது.
Fri, 20 Oct 202301:41 AM IST
Ayudha Puja ஆயுதபூஜைக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இன்று, நாளை, நாளை மறுநாள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 3 மையங்களில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com
