Tamil Latest News Updates : அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

Tamil Latest News Updates : அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

இன்றைய முக்கிய செய்திகள்

இன்று (16-10-2023) தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Mon, 16 Oct 202302:08 AM IST

Cm Stalin : சமாதான திட்டம் இன்று முதல் அமல்!

வணிகர்கள், நிறுவனங்கள் வணிகவரி நிலுவை தொகையை செலுத்த புதிய அணுகுமுறை, கூடுதல் சலுகைகளுடன் கூடிய ‘சமாதான்’ திட்டத்தை சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான வரி, வட்டி, அபராதம் நிலுவையில் இருந்தால், அத்தொகை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். மற்ற வணிகர்கள் குறிப்பிட்ட சதவீத தொகையை செலுத்தி வழக்கில் இருந்து விடுவித்துக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் முதல்வர் அறிவித்த வணிகர்களுக்கான சமாதான திட்டம் இன்று முதல் அமலாகிறது.

Mon, 16 Oct 202301:54 AM IST

Salem Airport  : 2 ஆண்டுகளுக்கு பின் சேலத்திற்கு விமான சேவை தொடக்கம்!

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் இருந்து பெங்களூரு-கொச்சிக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் விமான சேவை தொடங்குகிறது.

Mon, 16 Oct 202301:41 AM IST

Senthil balaji : அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 அன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Mon, 16 Oct 202301:54 AM IST

Vaiko Protest : திருச்சியில் வைகோ ஆர்ப்பாட்டம்!

கர்நாடக அரசை கண்டித்து திருச்சியில் வைகோ தலைமையில் மதிமுக ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுகிறது.

Mon, 16 Oct 202301:54 AM IST

Petrol Price : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை மாற்றம் இல்லாமல் இன்று (அக்.16) 513ஆவது நாளாக அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Mon, 16 Oct 202301:54 AM IST

Weather Update : 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *