Tamil Latest News Updates : வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

Tamil Latest News Updates : வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

இன்றைய முக்கிய செய்திகள்

இன்று (15-10-2023) தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Sun, 15 Oct 202303:59 AM IST

Kanyakumari : திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Sun, 15 Oct 202303:57 AM IST

Congress Candidates List : வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

தெலங்கானா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ். காங்கிரஸ் மூத்த தலைவர் கலம்நாத், மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

Sun, 15 Oct 202303:54 AM IST

Gold Rate : தங்கம் விலை இன்று!

தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.15) சவரனுக்கு  ரூ.44,440-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.5,555-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Sun, 15 Oct 202303:18 AM IST

சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கொடிவேரி அணையில் இருந்து விநாடிக்கு 1210 கன அடி தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி வெளியேறி வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

Sun, 15 Oct 202303:17 AM IST

Ganja Arrest : ஹவுரா மெயில் விரைவு ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!

மேற்குவங்கம் மாநிலத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்தடைந்த ஹவுரா மெயில் விரைவு ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல். கஞ்சா கடத்தி வந்த ஒடிசாவைச் சேர்ந்த முன்னா, குன்னா ஆகிய இருவரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

Sun, 15 Oct 202302:58 AM IST

Weather Update : 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sun, 15 Oct 202302:45 AM IST

Vasathi Case : வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு –  குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கடந்த மாதம், பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 215 பேருக்குத் தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Sun, 15 Oct 202302:43 AM IST

Nagai Srilanka Cruise : குறைவான டிக்கெட் விற்பனை – கப்பல் போக்குவரத்து இன்று ரத்து

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் 7 டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டதால்  கப்பல் போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

Sun, 15 Oct 202302:39 AM IST

Pakistans : பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!

பஞ்சாபில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Sun, 15 Oct 202302:26 AM IST

Rain : சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இரவில் கனமழை பெய்தது.

Sun, 15 Oct 202302:18 AM IST

Kulasai Dasara : குலசை தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் கோவிலில் தசரா திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

Sun, 15 Oct 202302:03 AM IST

Israel Palestine Conflict : இஸ்ரேல் – பாலஸ்தீன போர் : பலி எண்ணிக்கை 5000-த்தை தாண்டியது!

இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் பலி எண்ணிக்கை 5000-த்தை தாண்டியது. தற்போது நடைபெறும் இப்போர் 1948 ஆம் ஆண்டு நடைப்பெற்ற காஸா போரை நினைவூப்படுத்துவதாக மக்கள் வேதனை.

Sun, 15 Oct 202302:00 AM IST

Crime : கர்ப்பிணியை உயிரோடு எரித்து கொன்ற கணவர்

செங்கல்பட்டு அருகே கர்ப்பிணி என்று கூட பாராமல் மகன் கண்முன்னே மனைவியை எரித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sun, 15 Oct 202301:45 AM IST

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம்!

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் இன்று மும்பையில் நடக்கிறது.

Sun, 15 Oct 202301:34 AM IST

Weather Update :  கனமழை பெய்ய வாய்ப்பு!

தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Sun, 15 Oct 202303:54 AM IST

Palani Temple : பழநி முருகன் கோயிலில் தங்கரதப் புறப்பாடு நடைபெறாது!

நவராத்திரி விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் இன்று முதல் அக்.23-ம் தேதி வரை தங்கரதப் புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Sun, 15 Oct 202303:54 AM IST

Electric Trains : சென்னை-கூடூர் மின்சார ரயில்கள் ரத்து!

பராமரிப்பு பணி காரணமாக இன்று புறநகர் மற்றும் சென்னை-கூடூர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Sun, 15 Oct 202303:54 AM IST

Chief Minister Chandrasekhara Rao :  முதல்வர் சந்திரசேகர ராவ் பிரச்சாரம்!

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகிறார். அவருக்கு ராசியான இடமாக கருதப்படும் ஹீஸ்னாபபாத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். அன்று காலை கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.

Sun, 15 Oct 202303:54 AM IST

Madhya Pradesh Assembly Elections : காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியல் நவராத்திரியின் முதல் நாளான இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *