Tamil Latest News Updates : இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Tamil Latest News Updates : இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Latest News Updates : இன்று (06-11-2023) தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

Mon, 06 Nov 202302:52 AM IST

 Rain : அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ராணிப்பேட்டை வேலூர் திருவண்ணாமலை சேலம்,ராமநாதபுரம் நாகபட்டிணம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Mon, 06 Nov 202302:36 AM IST

Mountain Railway : மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து!

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் கல்லார் – அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே பல இடங்களில் பாறைகள் விழுந்து சேதமான காரணத்தால் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து.

Mon, 06 Nov 202302:23 AM IST

RS Bharathi : ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

நாகலாந்து மக்களை நான் இழிவுபடுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நாகலாந்து மக்கள் நாய்க்கறி உண்பது அவர்களின் கலாசாரம் என்பதை கவுகாத்தி உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது. நாகலாந்து மக்கள் நாய்க்கறி உண்பவர்கள்” என ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளுநர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் பதிலளித்துள்ளார்.

Mon, 06 Nov 202302:18 AM IST

PM Modi : இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது, தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியாக வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Mon, 06 Nov 202302:00 AM IST

Lake Level : முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

புழல் ஏரியில் நீர்இருப்பு 2726 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 189 கனஅடியாக சரிவு. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 617 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 58 கனஅடியாக சரிவு. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 437 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Mon, 06 Nov 202301:54 AM IST

Rajasthan Elections 2023 : காங்கிரஸ் கட்சி அறிவிப்பு!

Congress : ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது .

Mon, 06 Nov 202301:52 AM IST

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று தொடக்கம்.

Mon, 06 Nov 202301:35 AM IST

Rss Rally : ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு எதிரான தமிழக அரசின் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Mon, 06 Nov 202301:59 AM IST

Rain Update : கனமழை பெய்யவாய்ப்பு!

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Mon, 06 Nov 202301:59 AM IST

Petrol Price : பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையிலேயே தொடர்கிறது. தொடர்ந்து விலை மாற்றம் இல்லாமல் 534ஆவது நாளாக அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை இன்று (நவ.6) லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Mon, 06 Nov 202301:59 AM IST

KP Anbazhagan : முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வழக்கு!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று விசாரணைக்கு வருகிறது. 10,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நேரில் ஆஜராவதாக தகவல்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *