இந்த நிலையில், அஸ்ஸாமில் நேற்று பிஸ்வந்த் மாவட்டம் முதல் நாகோன் வரையிலான காங்கிரஸ் யாத்திரையின்போது, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டவர்களை நோக்கி ராகுல் காந்தி பொறுமை இழந்ததாக, பா.ஜ.க ஐ.டி செல் தலைவர் அமித் மாள்வியா, முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் X சமூக வலைதளத்தில் சிறிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டு ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் விமர்சித்திருக்கின்றனர். அந்த வீடியோவில், ராகுல் காந்தி பேருந்தில் அமர்ந்தபடி யாத்திரையில் சென்றுகொண்டிருக்க, சாலையோரத்தில் இந்து ஆதரவாளர்கள் கூட்டமாக காவி கொடியை ஏந்தியபடி ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகின்றனர். பின்னர், ராகுல் காந்தி பேருந்திலிருந்து இறங்கி அவர்களை நோக்கி வேகமாக செல்வது போன்று இருந்தது.
இந்தப் பாதி வீடியோவை வெளியிட்ட அமித் மாள்வியா, “ராகுல் காந்தி முன்னிலையில் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதையடுத்து அவர் பொறுமை இழந்துவிட்டார். இதற்கே இப்படிப் பதற்றப்படுகிறார் என்றால், இந்து விரோத காங்கிரஸ் அயோத்தி பிரதிஷ்டை அழைப்பை நிராகரித்த பிறகு, வரும் நாள்களில் இந்த நாட்டு மக்களை அவர் எப்படி எதிர்கொள்வார்?” என்று கேள்வியெழுப்பியிருந்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com
